கரு ஊமத்தை பயன்கள்

கரு ஊமத்தை பயன்கள்


1) வேறுபெயர்கள் -:
ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும். இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.
2) தாவரப்பெயர் -:
DATURA METEL.
3) தாவரக்குடும்பம் -:
SOLANACEAE.
4) வகைகள் -:
வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை எனும் வகைப்படும்.

5) வளரும் தன்மை -:
எல்லா வகை நிலங்களும் ஏற்றது. வளர்ச்சுயைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள்.
ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும்.

ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும்;நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது.

ஊமத்தை 1மீட்டர் வரை உயரமாக வளரும்செடி வகையைச் சார்ந்த‌து. அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில் காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல்போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும்.

ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.

மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான இதழ்களுடன் காணப்படுவதுண்டு (நீல ஊமத்தை/கரு ஊமத்தை).அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு (அடுக்கு ஊமத்தை).மருத்துவப் பயன் பொதுவாக அனைத்திற்கும் ஒன்றே ஆகும்.

பழங்கால இந்திய மருத்துவம் மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.  நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

6) பயன்தரும் பாகங்கள் -:
செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை.
7) பயன்கள் -:
பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும்.  அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.
இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச ்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.  மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.  கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச் சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.
இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.
ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக ்கிழங்கை அரைத்து பாலில் இரு வேளை மூன்று நாள் கொடுக்கலாம்.  இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

சித்தம் பிரமை -:
ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில ்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். -
ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும். மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

பேய்குணம் - :
இதன் காய், விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

'பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்படாமல் செய்ய வேண்டியது.
பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிட வாய்ப்புண்டு.

கருஊமத்தை..... மற்ற ஊமத்தை போன்று அல்லாது இதன் பூ அடுக்கு அடுக்காக இருக்கும் இது மிகவும் சக்தி வாய்ந்தது இதில் ரசமணி கட்டினால் அளவிட முடியாத சக்தியை வாரிவழங்கும்  என நம்பப்படுகிறது.
ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும்,வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.
இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
புண்கள், அழுகிய புண்கள் குணமாக  ½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் ½ லிட்டர் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன்படுத்தி வரவேண்டும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌  கீல்வாயு குணமாகும்.
தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.
வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.
கரு ஊமத்தை  மலைப் பகுதிகளிலுள்ள புறம் போக்கு நிலங்கள், பாழ் நிலங்களில் அரிதாகப் காணப்படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப் பகுதியிலும் வளர்கின்றது.
கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறு முட்களுடன் கூடியவை. இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது
நாய் கடிகளில் (அலர்க்க விஷம் ) – ஊமத்தை , வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்.
கிருமி – ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.
பிடக ஆமாய –
வேனல் கட்டிகளில் – வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு, கட்டிகளை கரைக்க வெளிப் பிரயோகமாக உதவும்.
மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் – கனகாசவம், சூத சேகர ரசம், மகா விஷ கர்ப்ப தைலம், உன்மத்த ரசம்.

ஆஸ்மா குணமாக -கனகாசவம் உதவும்.
அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்- தற்கொலைக்கு விஷம் சாப்பிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றியுள்ளது எனவே -ஆயுர்வேத சித்த மருந்தில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

அட்ரோபின் கண்ணின் விழிபார்வையை விரிக்க உதவும். இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது.

பொன்னூமத்தை மூலிகை மருத்துவம் – ரசவாதமும் -மிருக வசியம்.
சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளிலும், வனங்களிலும் குடில் அமைத்தும், குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் “பொன் ஊமத்தை” என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்…
காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே
தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே
காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். இம்மூலிகையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.