தாமரை – மருத்துவ பயன்கள்

தாமரை – மருத்துவ பயன்கள்

பிரண்டை உப்பு                            Pirandai Salt
 
   

தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.

தாமரை கொடி வகையைச் சார்ந்த‌ தாவரம். வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் . நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட, பெரிய உருண்டையான இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். தாமரை பெரிய, பகட்டான மலர்களைக் கொண்டது. மலர்கள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்படும். இவை முறையே வெண் தாமரை, செந்தாமரை என்கிற பெயர்களால் வழங்கப்படும்.

தாமரை ஓட்டமில்லாத நீர் நிலைகளில் மட்டுமே வளரும். பெரும்பாலும், கோயில் குளங்களில் காணலாம். தாமரை மலர்கள், வழிபாடு மற்றும் பூசைகளுக்குரியவை, தாமரை பூ, விதை, கிழங்கு ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாது பலம் பெற, ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து, பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிடு வர வேண்டும். 10 கிராம் தாமரைப்பூ, இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ¼ லிட்டராக்கி, வடிகட்டி, காலை, மாலை சாப்பிட்டுவர உடல் சூடு குணமாகும்.
தாமரை கிழங்கினை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்துவர பார்வை மங்கல் குணமாகும்.

தாமரை விதையைத் தேனுடன் அரைத்து, நாக்கில் தடவிவர வாந்தி, விக்கல் குணமாகும். நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும். கண்கள் குளிர்ச்சியடையும்.

வெண்தாமரை – மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். காம்புகள், துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.

வெண்தாமரை விதைகள், சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். தண்டு, இலை ஆகியவை செரியாமை, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.
வெண்தாமரை பூ, உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், காய்ச்சல், நீர்வேட்கை ஆகியவற்றைக் குணமாக்கும்.

தாமரை மலரின் கொட்டையிலிருக்கும் பருப்பு புரதச் சத்து மிகுந்தது, நீடித்துச் சாப்பிட ஆண்மையைப் பெருக்கும். பருப்பைத் தூள் செய்து, பானம் தயாரித்து அருந்தும் பழக்கம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் உள்ளது.
வெண் தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட, இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்; இருமல் கட்டுப்படும்; மூளைக்குப் பலம் தரும், மகரந்தங்களை உலர்த்தி பாலிலிட்டு குடிக்க பெண் மலட்டுத் தன்மை குணமாவதாக நம்பப்படுகிறது.

இரத்தக் கொதிப்பு கட்டுப்பட வெண் தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி, பொடி செய்து கொண்டு, 1½ தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகளுக்குப் பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, பசும்பாலில் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.
 
வெண் தாமரை மருத்துவ குணங்கள்

* வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும். நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும். இதை காலை, மாலை, இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.

*தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 ml) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகு, சிவப்பு நிறமடையும். நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை   தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்


*வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 - 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

*வெண் தாமரைப்பூ ஒன்றின் இதழ்களை, பழைய மண் பாண்டத்தில் போட்டு அதில் 200 மி.லி. நீரை ஊற்றவும். அடுப்பில் வைத்து, நீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இந்த குடிநீரை வேளைக்கு 3 அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் மூளை பலம் பெறும். அதன் செயல்பாடு சிறப்பாகும். 

*மேற்சொன்னது போல், தயாரித்த தாமரை குடிநீரில் பால், சர்க்கரை சேர்த்து, பருக, இருதய நோய்கள் அகலும். தினம் இருவேளை 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். காய்ச்சலுக்கும் இந்த தாமரை குடிநீர் நல்லது.

செந்தாமரை மருத்துவ குணங்கள்:
*வெண் தாமரைப்பூவை பயன்படுத்து வது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன் படுத்தலாம். செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக். செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த லேகியம்

*தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்.

*தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.

*காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

*வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

*தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

*வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

*தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

*மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.

*தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

மூளை வளர்ச்சி
உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.
கண்பார்வை தெளிவு
வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.
உயர் ரத்த அழுத்தம்
வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
கூந்தல் தைலம்
தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
இருதயநோய் போக்கும்
செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.
இருமல் போக்கும் நீர்
தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு தனியும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.
 
இதய சம்பந்தபட்ட நோய்கள் வராமல் தடுக்கவும், இதயத்தை பலமாக்கவும், வந்துவிட்ட இதய நோய்களை குணமாக்கவும் பிரண்டை உப்பையும் மற்றும் சிருங்கி பற்பத்தையும் 1 முதல் 2 மண்டலங்கள் சாப்பிட்டு வந்தால் முழுமையாக எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் குணப்படுத்தலாம். மற்றும் மருதம்பட்டை உப்பையும், சிருங்கி பற்பத்தையும் இணைந்து எடுக்கும்போது இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். 
 
பிரண்டை உப்பு+சிருங்கி  பற்பம் (or) மருதம்பட்டை உப்பு+சிருங்கி  பற்பம் தாமரை கசாயத்தில் சாப்பிட்டு வர அனைத்து விதமான இதய பிரச்சினைகளும் நீங்கும்.
 
 
 பிரண்டை உப்பு, சிருங்கி  பற்பம், மருதம்பட்டை உப்பு தேவைக்கு எங்களை k7HERBOCARE-ஐ அணுகவும்.
 

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

இதய நோய்கள் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, இதய நோய்கள் Home Page-ற்கு செல்லவும்

இதய நோய்கள் Home Page