குடல் புழுக்களை அழிக்க...

குடல் ஒட்டுண்ணிகள்

குடல் ஒட்டுண்ணிகள் என்ற குடல் புழுக்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சினையாகும்.

குடல் புழுக்களை அழிக்க, உடலை விட்டு வெளியேற்ற வாய்விளங்கம் பொடியை 2, 3 நாட்கள் சாப்பிட்டு விட்டு மிதமான பேதிக்கு கொடுக்க குழந்தைகள், சிறுவர்கள் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்...

பெரியவர்களுக்கு பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை 300mg அளவிற்கு 2 முதல் 3 மாத காலத்திற்கு சாப்பிடும் போது வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறுவதோடு மற்ற செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் சரியாகும்...

பிரண்டை உப்பு                            


ஒட்டுண்ணி என்றால் என்ன?

ஒரு ஒட்டுண்ணி என்பது, இன்னொரு விலங்கினுள் அல்லது அதன் மேல் வாழ்ந்து அதன் ஊட்டச்சத்தை உறிஞ்சும் ஒரு உயிரினம் அல்லது ஒரு சிறிய விலங்கு ஆகும். ஒரு ஓட்டுண்ணியால் தனித்து வாழமுடியாது. ஒட்டுண்ணிகள் தெள்ளுப்பூச்சி, பேன், மற்றும் புழுக்கள் என்பனவற்றை உட்படுத்தும். ஒட்டுண்ணி நோய்கள் புரொட்டோஸோவா ( மலேரியா போன்ற ஓரணு உயிரினம்), ஹெல்மின்தீஸ் (புழுக்கள்), மற்றும் (சொறிசிரங்கு போன்ற) ஆர்த்ரோப்போடாக்கள் போன்றவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களை உட்படுத்தும்.

குடலுக்குரிய ஒட்டுண்ணி என்றால் என்ன?

ஒரு குடலுக்குரிய ஒட்டுண்ணி குடலில் வாழும். குடல் ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் புரொட்டோஸோவா (ஜீயார்டியா போன்றவை) அல்லது புழுக்கள் (ஊசிப்புழுக்கள் அல்லது நாடாப்புழுக்கள் போன்றவை) உங்கள் பிள்ளையின் உடலினுள் உட்புகுந்து குடலை ஒரு புகலிடமாக உபயோகிக்கிறது. ஒட்டுண்ணிகள் குடல் அல்லது உடலின் வேறு பாகங்களில் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஒட்டுண்ணிகள் அறிகுறிகள் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் இருக்கலாம்.
ஒட்டுண்ணிகள் உலகம் முழுவதும் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. பகல் பராமரிப்பு நிலையங்கள் போன்ற மக்கள் நெரிசலாக உள்ள இடங்களில் தொற்றுநோய் பரவுகிறது. அத்துடன், வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள பிள்ளைகள் பெரும்பாலும் எதாவது ஒரு வகையான ஓட்டுண்ணியைக் காவிச் செல்கிறார்கள். மோசமான சுகாதார நிலை மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீர் என்பன ஒட்டுண்ணிகள் பற்றிக்கொள்ளும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
பிள்ளைகளில் மிகவும் சாதாரணமான குடலுக்குரிய ஒட்டுண்ணிகள் ஜீயார்டீயசிஸ் மற்றும் ஊசிப்புழு என்பனவாகும். கனடா நாட்டுக்கு வெளியே பிறந்த பிள்ளைகள் அல்லது சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் மோசமான வளரும் நாடுகளில் வாழும் பிள்ளைகளில் வேறு ஒட்டுண்ணிகள் சாதாரணமாயிருக்கின்றன. இவை அஸ்கரியாசிஸ், அமிபியாசிஸ், மற்றும் நாடாப்புழு என்பனவற்றை உட்படுத்தும்.

ஜீயார்டீயசிஸ்

ஜீயார்டீயசிஸ் என்பது நீரால் பரவும் ஒரு நோய். உங்கள் பிள்ளை மாசுபடுத்தப்பட்ட நீர் நிலையில் தண்ணீர் குடித்தால் அவளுக்குத் தொற்றுநோய் ஏற்படலாம். போதிய தண்ணீர் மற்றும் சுகாதார வசதியில்லாத பகுதிகளில் அல்லது பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள் போன்ற மக்கள் அதிக நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் இடங்களில் பிள்ளைகளுக்கு ஜீயார்டீயசிஸ் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஜீயார்டீயசிஸ் நோய் நீர்நாய்க் காய்ச்சல் என்றும் அறியப்படுகிறது. ஏனென்றால் இது தூய்மையாக்கப்படாத குளத்து நீரைக் குடிப்பதன் மூலம் தொற்றிக் கொள்கிறது.

ஜீயார்டீயசிஸ் நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

சில பிள்ளைகள் எந்த அடையாளங்கள் அல்லது அறிகுறிகளை விருத்திசெய்யாவிட்டாலும் அவர்களால் இன்னும் ஒட்டுண்ணிகளைத் தங்கள் உடலில் கொண்டு சென்று தங்கள் மலத்தின் மூலமாகப் பரப்ப முடியும். நோயுறும் பிள்ளைகளுக்கான அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
  • தண்ணீர் போன்ற வயிற்றுப்போக்கு
  • மென்மையான, எண்ணைப் பசையுள்ள மலம்
  • களைப்பு
  • வயிற்றில் தசைப்பிடிப்பு
  • வயிறு உப்புதல்
  • குமட்டுதல்
  • கடுமையான எடை இழப்பு
ஜீயார்டீயசிஸ் நோயில், மலத்தில் இரத்தம் மற்றும் சளி காணப்படாது. பெரும்பாலும் தொற்றுநோய் ஏற்பட்டு 2 வாரங்களின் பின்னர் தான் அறிகுறிகள் வெளிக்காட்டப்படும். சிகிச்சை செய்யப்பட்டால், அறிகுறிகள் 6 வாரங்களில் நிவாரணமடையும். பெரும்பாலான பிள்ளைகளுக்கு சிகிச்சை ஒருபோதும் தேவைப்படாது.

ஜீயார்டீயஸ் நோய்க்கான காரணங்கள்

இதனுடைய ஒட்டுண்ணிகள் ஆறுகள், ஓடைகள், மற்றும் குளங்கள், அல்லது மாநகரசபை விநியோகிக்கும் தண்ணீர், நீச்சல் குளங்கள், மற்றும் ஆரோக்கிய நீரூற்றுகள் (ஸ்பா) என்பனவற்றில் காணப்படலாம். நோய்த் தொற்றுள்ள உணவு அல்லது ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதன் மூலமும் இத் தொற்றுநோய் கடத்தப்படலாம். இந்த ஒட்டுண்ணிகள் மிருகங்களின் மலத்திலும் காணப்படலாம்.

ஜீயார்டீயஸ் நோயின் சிக்கல்கள்

ஜீயார்டீயசிஸ் நோயின் சாத்தியமாகக்கூடிய சிக்கல்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:
  • கடுமையான வயிற்றுப்போக்கு, மிகவும் அரிதானது, உடல்நீர் வறட்சியை ஏற்படுத்தலாம்

ஜீயார்டீயஸ் நோய் எப்படிக் கண்டுபிடிக்கப்படுகிறது

உங்கள் பிள்ளைக்கு ஜீயார்டீயசிஸ் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு உங்கள் மருத்துவர் உங்கள் பிள்ளையின் மலத்தைப் பரிசோதனை செய்யலாம். துல்லியத்தை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் பிள்ளைக்கு இந்தப் பரிசோதனை ஒரு சில நாட்களுக்குத் திரும்பத் திரும்பச் செய்யப்பட வேண்டியிருக்கலாம்.

ஜீயார்டீயஸ் நோய்க்குச் சிகிச்சையளித்தல்

ஒட்டுண்ணிக்குச் சிகிச்சையளிக்க சில மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன. உங்கள் பிள்ளையின் தேவைகளுக்கு எந்த மருந்து மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது என்பதை உங்கள் பிள்ளையின் மருத்துவர் தீர்மானிப்பார்.

ஊசிப்புழு

ஊசிப்புழுக்கள் என்பது மல வாசலில் வாழும் மிகவும் சிறிய, வெள்ளை நிற நூல் போன்ற புழுக்கள் ஆகும். இரவில், புழுக்கள் ஊர்ந்து மலவாசலை விட்டு வெளியேறி அருகிலுள்ள தோலில் முட்டைகளை இடும். இது பயங்கரமான அரிப்பை ஏற்படுத்தும். ஊசிப் புழு மனதுக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால் இது நோயை ஏற்படுத்தாது.
ஊசிப்புழுவின் முட்டைகள் மிகவும் விடாப்பிடியானவை. ஊசிப்புழுவின் முட்டைகள் உடலுக்கு வெளியே, உடைகளில், படுக்கையில், அல்லது வேறு பொருட்களில் 2 வாரங்கள் வரை உயிர் வாழ முடியும்.

ஊசிப்புழுவுக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

பொதுவாக, ஊசிப்புழுவைக் கொண்டிருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் அறிகுறிகளைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு மலவாசலைச் சுற்றி, விசேஷமாக இரவில், கடுமையான அரிப்பு இருக்கும். அவர்கள் நித்திரையை இழப்பார்கள். அவர்கள் அரிப்பினால் அமைதியின்றியும் இருப்பார்கள்.
உங்கள் பிள்ளையின் மலவாசலைச் சுற்றி, உள்ளாடையில் அல்லது டயபர்களில், அல்லது கழிவறையை உபயோகித்த பின்னர் கழிவறையில், வளர்ந்த புழுவை நீங்கள் காணலாம் அல்லது காணாமலும் இருக்கலாம்.

ஊசிப்புழுவுக்கான காரணங்கள்

ஊசிப்புழு பிள்ளைகளுக்கிடையே இலகுவாகப் பரவும். ஒரு பிள்ளை தொற்றுநோயுள்ள பகுதியைச் சொறியும்போது, அவளின் விரல்களில் அல்லது விரல் நகங்களுக்குக் கீழ் முட்டைகளைப் பெற்றுக்கொள்கிறாள். தொற்றுநோயுள்ள பிள்ளை முட்டைகளை வேறொரு பிள்ளைக்குக் கடத்தும்போது, மற்றும் அந்தப் பிள்ளை முட்டைகளை அறியாது விழுங்கும்போது தொற்றுநோய் பரப்பப்படுகிறது.
ஊசிப்புழு மறைமுகமாகவும் கடத்தப்படலாம். தோற்றுநோயுள்ள ஒருவரிடமிருந்து முட்டைகள் விளையாட்டுப் பொருட்கள், கழிப்பறை இருக்கைகள், உடைகள், அல்லது படுக்கைகளில் ஒட்டிக்கொள்ளலாம். ஒரு பிள்ளை முட்டைகளைத் தொட்டு விட்டு அவற்றைத் தன் வாயில் வைக்கும்போது தொற்றுநோயைப் பிடித்துக்கொள்ளலாம். மிதமான காலநிலைகளில் மற்றும் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களிலுள்ள பிள்ளைகளுக்கு ஊசிப்புழு பிடித்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஊசிப்புழுக்கள் எப்படி அடையாளம் கண்டுபிடிக்கப்படுகின்றன

ஊசிப்புழுக்களைக் கண்டுபிடிப்பதற்கு, மருத்துவர்கள் ஒரு நாடாப் பரிசோதனை செய்யும்படி சிபாரிசு செய்யலாம். நாடாப் பரிசோதனையை நீங்களே செய்யலாம் அல்லது உங்கள் பிள்ளையின் மருத்துவர் செய்வார். மல வாசலைச் சுற்றியுள்ள தோலில் செல்லோஃபேன் நாடா அழுத்தப்படும். பின்னர் அந்த நாடா ஒரு நுண்பெருக்கிக் கண்ணாடியின் கீழ், ஊசிப் புழு முட்டைகளுக்காகப் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையை வீட்டில் செய்வதானால், உங்கள் பிள்ளை குளிப்பதற்கு அல்லது கழிவறைக்குப் போவதற்கு முன்பாகக் காலையில் செய்வது மிகவும் சிறந்தது. மாதிரி நாடாவை உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் எடுத்துச் செல்லவும்.
ஊசிப்புழுவுக்கான வேறொரு பரிசோதனை, உங்கள் பிள்ளையின் மலவாசலைச் சுற்றி, உள்ளாடையில் அல்லது டயபரில், அல்லது கழிவறைக்குப் போய்விட்டு வந்தபின்னர் கழிவறையில் நீங்கள் ஒரு வளர்ந்த ஊசிப்புழுவைப் பார்ப்பது ஆகும். அவை வெள்ளை நிறமானவை மற்றும் ஏறக்குறைய ஒரு சென்டி மீட்டர் நீளம் மாத்திரம் உடையவை என்பதை நினைவில் வைக்கவும்.

ஊசிப்புழுவுக்குச் சிகிச்சையளித்தல்

நோய் கண்டுபிடிக்கப்பட்டால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு வாய்வழியான மருந்தை மருந்துக் குறிப்பு எழுதித் தரக்கூடும். பெரும்பாலும் மருந்து வேலை செய்வதற்கு ஏறக்குறைய 2 வாரங்கள் செல்லும். அரிப்பு 1 வாரம்வரை நீடிக்கலாம்.
குடும்ப அங்கத்தினருள் ஒருவருக்கு ஊசிப்புழு கண்டுபிடிக்கப்பட்டால், மற்றக் குடும்ப அங்கத்தினரும் பரிசோதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்.

பிள்ளைகளில் வேறு சாதாரணமான ஒட்டுண்ணிகள்

பிளாஸ்டொசிஸ்டிஸ் ஹொமினிஸ்

பிளாஸ்டொசிஸ்டிஸ் ஹொமினிஸ் என்பது ஆரோக்கியமான அல்லது வயிற்றுப்போக்குள்ள அல்லது வயிற்று வலியுள்ள பிள்ளைகளின் மலத்தில் காணப்படும் ஒரு சின்னஞ்சிறிய ஒட்டுண்ணி ஆகும். இந்தத் தொற்றுநோய் பெரும்பாலும் தானாகவே நிவாரணமடைந்துவிடும்.

டியன்டமோய்பா

டியன்டமோய்பா குடல்களில் வாழ்கிறது. இது நோய் தொற்றப்பட்ட உணவு அல்லது தண்ணீர் மூலமாகப் பரவுகிறது. டியன்ட்மோய்பா நோய்களை ஏற்படுத்தாது.

அஸ்கரியாசிஸ்

அஸ்கரியாசிஸ் என்பது ஒரு வகையான உருளைப்புழுத் தொற்றுநோய். இந்தப் புழுக்கள் 41 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும். உடலில் நூற்றுக்கணக்கான புழுக்கள் பரவித் தாக்கினால் மாத்திரம் இந்த ஒட்டுண்ணி வினைமையானது. உங்கள் பிள்ளை அறிகுறிகளை விருத்திசெய்வான்.

அமீபியாசிஸ்

உங்கள் பிள்ளையின் தொகுதிக்குள் அமீபா உட்புகுந்து பெருகும்போது அமீபியாசிஸ் ஏற்படும். இந்தத் தொற்றுநோய் அறிகுறிகளைக் காண்பிக்காமல் இருக்கலாம். கடுமையான தொற்றுநோய், மிகவும் அரிதானது, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சட்காமாலை, அல்லது எடை இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

நாடாப் புழு

ஒரு நாடாப்புழுத் தொற்றுநோய் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது தண்ணீரினால் ஏற்படுகிறது. விழுங்கப்பட்ட நாடாப்புழு முட்டைகள், உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்குள் நீர்ப்பைகளை உருவாக்குவதற்காக உங்கள் பிள்ளையின் குடலிலிருந்து நகர்ந்து செல்கின்றன. விழுங்கப்பட்ட நாடா நுண்புழுக்கள் பெரிய நாடாப்புழுக்களாக வளரும். இவை குடலில் வாழும்.

எப்போது மருத்துவ உதவியை நாடவேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரைச் சந்திக்கவும்:
  • உங்கள் பிள்ளையின் வயிற்றுப்போக்கு அல்லது குமட்டுதல் 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது
  • உங்கள் பிள்ளையின் உடல் நீர் வரட்சியடைகிறது
உங்கள் பிள்ளை, பிள்ளைப் பராரிப்பில் இருந்தால், சமீபத்தில் வேறு நாட்டுக்குப் பிரயாணம் செய்திருந்தால், அல்லது மாசுபட்ட நீரைக் குடித்திருந்தால் மருத்துவருக்குத் தெரிவிப்பதற்கு நிச்சயமாயிருக்கவும்.

தடுத்தல்

ஒட்டுண்ணிகளுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு நல்ல சுகாதாரம் ஆகும். உங்கள் பிள்ளை, உங்கள் குடும்பத்தினர், மற்றும் உங்கள் பிள்ளையின் பகல் நேரப் பராமரிப்பு நிலையம் பின்வரும் ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்:
  • அடிக்கடி கைகளைக் கழுவவும். விசேஷமாக டயபர்கள் மாற்றிய பின்னர், கழுவறைக்குப் போகும்போது, மற்றும் வெளியில் விளையாடும்போது அவ்வாறு செய்யவும்.
  • மாசுபடச் சாத்தியமுள்ள தண்ணீர் தவிர்க்கப்படவேண்டும், அல்லது கொதிக்க வைக்கப்பட அல்லது வடிகட்டப்பட வேண்டும்.
  • படுக்கையை ஒழுங்காகக் கழுவவும்.
  • பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களைத் தொற்றுநீக்கிகளினால் கழுவவும்.
  • உள்ளாடைகளை ஒழுங்காக மாற்றவும்.
  • குளத்தில், ஏரியில், அல்லது நீரோடைகளில் நீச்சலடிக்கும்போது தண்ணீரை விழுங்காதிருக்க முயற்சிக்கவும்.
  • ஊசிப்புழுக்கள் வெளிச்சத்துக்கு மிகுந்த நுண்ணுணர்வு உள்ளவையானதால், பகல் நேரத்தில் படுக்கையறைத் திரைகள் மற்றும் திரைச்சீலைகளைத் திறந்து விடவும்.

முக்கிய குறிப்புகள்

  • குடலுக்குரிய ஒரு ஒட்டுண்ணி குடலில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வாழும் மற்றும் அடிக்கடி இனப்பெருக்கம் செய்யும்.
  • மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீர், குடலுக்குரிய ஒட்டுண்ணிகள் பரவுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.
  • நோய்வாய்ப்படும் பிள்ளைகளின் அறிகுறிகள் தண்ணீர் போன்ற வயிற்றுப்போக்கு, களைப்பு, மற்றும் குமட்டுதல் என்பனவற்றை உட்படுத்தலாம்.
  • சிகிச்சை வாய் வழியான மருந்தை உட்படுத்தலாம்.
  • ஒட்டுண்ணிக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு நல்ல சுகாதாரம் ஆகும்.
Mark Feldman, MD, FRCPC
5/7/2010 
நன்றி:
http://www.aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages/Intestinal-Parasites.aspx 

Keywords:

குடலில் நுண்புழுக்கள், குடல் புழு மாத்திரை, குடல் புழுக்கள் அறிகுறிகள், குடல் புழு நீங்க, குடல் புழு வெளியேற, நூல் புழு நீங்க, மலத்தில் புழு, ஆசனவாய் புழு, வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க, குடல் புழுக்கள் நீங்க, குடல் புழுக்கள், குடல் புழுக்கள் அறிகுறிகள், குடலில் புழுக்கள்,

வயிற்று பூச்சி வெளியேற, வயிற்று பூச்சி அறிகுறிகள், நாக்கு பூச்சி மருந்து, வயிற்றில் நாக்கு பூச்சி, வயிற்று பூச்சி மாத்திரை, வயிற்று பூச்சி மருந்து, ஆசனவாய் பூச்சி, வயிற்று பூச்சிகள் குறைய, வயிற்று பூச்சி இருந்தால்,