எலும்பு மெலிதல் நோய்க்கு பிரண்டை உப்பு
எலும்பு மெலிதல் நோய்
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைவாக இருக்கும் நபர்களை குறிப்பாக பெண்களையும், வயதானவர்களையும் அதிக
அளவில் இந்த நோய் தாக்கும்.
உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளதவர்கள், சூரிய ஒளி உடலில் படாமல் பெரும்பாலும் குளிர்சாதன வசதி உள்ள அறைகளிலேயே முடங்கிக் கிடப்பவர்கள்,இரவில் வேலை பார்த்து பகலில் தூங்கும் BPO மற்றும் Software துறையைச் சார்ந்தவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம்.
ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வந்து விட்டால் எந்த ஒரு சிறு விபத்தானாலும் கூட எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதற்கான தீர்வு கால்சியம் அதிகம் உள்ள இயற்கையான பொருட்களை எடுத்துக் கொள்ளுதல். உதாரணத்திற்கு பால், முட்டை, நாட்டுக்கோழி இவைகளில் அபரிமிதமாக கால்சியம் உள்ளது, வெஜிடேரியன் உண்பவர்கள் பால் மற்றும் பழ வகைகளில் சீதாபழம், கொய்யா பழம், சப்போட்டா, பாடம் செய்த அத்தி போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை பாக்கு போடும் பழக்கமும் கால்சியத்தையும், செரிமானத்தையும் கூட்டும். கண்டிப்பாக தினமும் வெயிலும் நம் உடம்பின் மீது ஒரு அரை மணி நேரமாவது பட வேண்டும்.
மேலும் Bone setter என்று அழைக்கப்படுகிற பிரண்டையிலிருந்து தயாரிக்கப்படும் பிரண்டை உப்பை
தினமும் காலை
மாலை
இருவேளை 300mg அளவிற்கு 2 முதல்
3 மாத
காலத்திற்கு சாப்பிடும் போது எந்த வயதாக இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் மற்றும் எலும்புகளில் வலி சரியாகி எலும்புகளின் வலிமை கூடும்...
ஆஸ்டியோபோரோசிஸ்: அலட்சியம் வேண்டாம்!
‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினம் - 20 அக்டோபர்.உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய். எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்கபடுகிறது.
இந்நிலையில், எலும்பு மெலிதல் நோய் யாருக்கெல்லாம் வரும்? வராமல் தடுக்க என்ன வழி என்பது போன்ற சந்தேகங்களை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
எதனால் வருகிறது?
எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
யாருக்கெல்லாம் வரும்?
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைவாக இருக்கும் நபர்களுக்கு அதிக அளவில் இந்த நோய் தாக்கும். தற்போது ஆண்களை, இந்த நோய் அரிதாகத் தான் தாக்குகிறது. புகை பிடித்தல், ஒரு வாரத்துக்கு 200 மி.லி அளவை தாண்டி மது அருந்துபவர்கள், உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளதவர்கள், சூரிய ஒளி உடலில் படாமல் பெரும்பாலும் குளிர்சாதன வசதி உள்ள அறைகளிலேயே முடங்கிக் கிடப்பவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் பரம்பரை வழியாகவும் இந்த நோய் தாக்கும்.
எப்படி அறியாலாம்?
எலும்பின் அடர்த்தித் தன்மை அறிவதற்கு என ‘டெக்சா’ என்றொரு மருத்துவ பரிசோதனை இருக்கிறது. டெக்சா பரிசோதனை முடிவில் ஒருவரின் எலும்பின் அடர்த்தித் தன்மை எவ்வளவு, வருங்காலத்தில் அவருக்கு ஆடியோபோரோசிஸ் நோய் வருமா எனக் கண்டறிய முடியும்.
மருந்து உண்டா?
நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை குறைக்க வலி நிவாரணி மட்டுமே ஆங்கில மருத்துவத்தில் உள்ளது. சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவத்தில் எலும்பு மெலிதல் நோய்க்கு முழுமையான தீர்வு உண்டு. இந்த நோய் வந்தவர்கள் நோயை முழுமையாக குணப்படுத்தும் வரையில் அதிகளவில் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடக் கூடாது. அதிக எடைகளைத் தூக்கக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. எனினும், மருத்துவர் ஆலோசனைபடி சிறு சிறு எளிய பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். கால்சியம் அதிகளவில் எடுத்துகொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பரிசோதிக்கும் பி.எம்.ஐ மதிப்பில் 25-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் மட்டுமே இருக்க வேண்டும். தினமும், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். அதிக அளவில் காபின் கலந்த காபியை குடிக்கக் கூடாது, மது, சிகரெட்டுக்குத் தடா போடவேண்டும்.
உடலின் எலும்புகளைப் பலவீனமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை விரட்டி அடிக்க இன்றே உறுதி எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி!
நன்றி: விகடன்
https://www.vikatan.com/news/coverstory/33767.html
Keywords:
எலும்பு
தேய்மானம் அறிகுறிகள், எலும்பு தேய்மானம்
குணமாக, எலும்பு தேய்மானம் சரியாக, எலும்பு தேய்மானம், எலும்பு தேய்மானம் in English,
எலும்புகள் தேய்மானம், கழுத்து எலும்பு தேய்மானம், பல் எலும்பு தேய்மானம், இடுப்பு
எலும்பு தேய்மானம், எலும்பு தேய்மானம் மூட்டுவலி குணமாக இதை விட வேறு மருந்தும் தேவை
இல்லை, எலும்பு தேய்மானத்தை தடுக்க, முட்டி
தேய்மானம், எலும்பு வலி, எலும்பு பலம் பெற, கழுத்து வலி மருத்துவம், எலும்பு வலி குணமாக,
இடுப்பு எலும்பு வலி, நெஞ்சு எலும்பு வலி, எலும்பு தேய்மானத்தை தடுக்க,