Posts

Showing posts with the label சிறுநீரக சிகிச்சை

சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள், சிறுநீரக பிரச்சினைகள் அறிகுறிகள்

சிறுநீரக பிரச்சனையை கண்டறியும் வழிமுறைகள்,  அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன?   சிறுநீரக நோய் நமக்கு வலி மிகுந்ததாகவும், கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாக இருக்கும். இந்நோய் இருந்தால் சிறுநீரகங்களில் நீர்க்கட்டிகள் ஏற்படும். திரவம் நிறைந்த நிறைய கட்டிகள் சிறுநீரகத்தில் உருவாகக் கூடும். இந்த நிலையில் இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உடல் வலி, வயிறு வீக்கம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல விதமான உடல் பிரச்சினைகள் தோன்றி அவர்களை மிகவும் சிரமத்திற்கு உண்டாக்கும். இந்த நோயை நீங்கள் கண்டு கொள்ளாமலும், சிகிச்சையளிக்காமலும் இருந்தால் இது கல்லீரலில் அதிகப்படியான நீர்க்கட்டிகளை உருவாக்கி பக்கவாதம் போன்ற நோய்கள் வர வழிவகுக்கிறது. இதனால் இந்த நோய் ஏற்பட்டவருக்கு சிறுநீரக செயலிழப்பு உண்டாகும். அதனால் இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.   இந்த நோயின் அறிகுறிகள்: •      சிறுநீர் கழிப்பதில் சிரமம் தான் இந்த நோயின் முதல் அறிகுறியாகும். பின்பு இடுப்பு பக்கத்தில் அலை போல வலி உண்டாகும். சிறுநீர் வெளியேறும் போது மஞ்ச

சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்

  சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?   சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.   1.    சிறுநீரக வியாதி உள்ளதா இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது? ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.  

சிறுநீரகம் நன்றாக செயல்பட

உப்பை வறுத்து பின்  உணவில் கலந்து சாப்பிடுவதால் என்ன பயன்கள்....   சிறுநீரக kidney பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு. ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடிவயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். அதே போல் சிறுநீர்பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை சுருங்கி மடிப்பு ஏற்படும். அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும். அதேபோல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டுவைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்றுவிடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். அது மட்டுமல்ல ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும். சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது எ

சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரிக்காய்!!!

சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரிக்காய்!!!   வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை என்றாலும், சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் வெள்ளரியில் உள்ளது.  நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் அதிகமாக காணப்படுகிறது.  ஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். பசியை அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் நீர் சுரக்கிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்யில் உள்ளது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி, மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடலாம் அல்லது வெள்ளரிக்காய்களை மிக்ஸியில் அரைத்து சாறாக்கி குடிக்கலாம்.  வெள்ளரியின் பயன்கள் : • வெள்ளரிக்காய் குறைவான கலோரியை கொண்டுள்ளது.