சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள், சிறுநீரக பிரச்சினைகள் அறிகுறிகள்

சிறுநீரக பிரச்சனையை கண்டறியும் வழிமுறைகள், 

அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன?

 

சிறுநீரக நோய் நமக்கு வலி மிகுந்ததாகவும், கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாக இருக்கும். இந்நோய் இருந்தால் சிறுநீரகங்களில் நீர்க்கட்டிகள் ஏற்படும். திரவம் நிறைந்த நிறைய கட்டிகள் சிறுநீரகத்தில் உருவாகக் கூடும். இந்த நிலையில் இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உடல் வலி, வயிறு வீக்கம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல விதமான உடல் பிரச்சினைகள் தோன்றி அவர்களை மிகவும் சிரமத்திற்கு உண்டாக்கும். இந்த நோயை நீங்கள் கண்டு கொள்ளாமலும், சிகிச்சையளிக்காமலும் இருந்தால் இது கல்லீரலில் அதிகப்படியான நீர்க்கட்டிகளை உருவாக்கி பக்கவாதம் போன்ற நோய்கள் வர வழிவகுக்கிறது. இதனால் இந்த நோய் ஏற்பட்டவருக்கு சிறுநீரக செயலிழப்பு உண்டாகும். அதனால் இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

 

இந்த நோயின் அறிகுறிகள்:

     சிறுநீர் கழிப்பதில் சிரமம் தான் இந்த நோயின் முதல் அறிகுறியாகும். பின்பு இடுப்பு பக்கத்தில் அலை போல வலி உண்டாகும். சிறுநீர் வெளியேறும் போது மஞ்சள் மற்றும் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிலருக்கு சொட்டு சொட்டாக வெளியேறி பிறப்புறுப்பில் வலியை ஏற்படுத்தும். இந்த தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் உண்டாகும்.

     வெப்பப் பகுதியில் இருப்பவர்களுக்கு, உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலும் இது போன்று கற்கள் உருவாகும்.

     40 முதல் 60 வயது வரை உள்ள ஆண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.

     உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதும் இந்நோயிற்கு வழி வகுக்கின்றது.

 

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள்:

     பச்சை டீ (Green Tea) அல்லது பால் கலக்காத டீ குடித்து வரலாம்.

     இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதை தடுக்க செய்யும். இதனால் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும்.

     சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை சாறை அதிகளவில் பருக வேண்டும். இதில் உள்ள அமிலம் சிறுநீரில் கலப்பதால், கல் உருவாவதை தடுக்கின்றது.

     வாழைத் தண்டை பொறியலாகவோ, கூட்டாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வந்தால்-சிறுநீரகத்தில் உள்ள கற்கள் விரைவில் கரைந்து விடும்.

     மட்டன் மற்றும் மீன் அதிகளவில் உட்கொள்ளாமல் இருந்தால் கல் உருவாவதை தடுக்க இயலும்.

     தினமும் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். 4 லிட்டர் முதல் 6 லிட்டர் வரை குடிக்கலாம்.இதனால் சிறுநீர் அதிகளவில் வெளியேறும்.

     பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்சினைகள் உண்டாகும், அதிலும் முக்கிய காரணம் வேலை பளுவினால் ஏற்படுகின்ற உயர் இரத்த அழுத்தம் என்று சொல்லலாம்.

     தினமும் அதிகப்படியான நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்புகள், கீரைகள் போன்றவற்றை உண்பது உங்களுக்கு நன்மை தரும் விஷயமாக இருக்கும்.

     குறைந்த அளவிலான உப்பு மற்றும் இனிப்பு பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

     பொரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிக மசாலா கலந்த உணவுப்பொருட்களை தவிர்த்தல் நல்லதாகும். இவற்றை வருமுன் காக்க செய்தால் கிட்னி பாதிப்பிலிருந்து நம்மால் தப்ப இயலும்.

     கெமிக்கல் கலந்த உணவு பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதை எப்படி அறிந்து கொள்வது?

     இரத்த, சிறுநீர் சோதனைகள், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை சொல்லிவிடும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் சிறுநீரில் அதிகப்படியான புரதம் இருப்பது என சொல்லலாம்.

     உங்களுக்குக் கால்களில் ஏற்படும் வீக்கம், காரணம் சொல்லமுடியாத சோர்வு, பலவீனம், தினசரி பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் சிரமம், பசியின்மை, குமட்டல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

 

சிறுநீரக நோய் வந்தால் என்ன செய்யலாம்?

வாழை:

     வாழைத்தண்டு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து உண்பது நல்லது. இதனால் சிறுநீரக கற்கள் விரைவில் குணமடைந்துவிடும்.

     வாழைச்சாற்றை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து கொடுத்து வந்தால், சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்துவிடும்.

துளசி:

துளசி இலை சாறுடன், தேன் கலந்து உட்கொண்டால் கற்கள் விரைவில் கரைந்து விடும். ஆனால் இதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

மாதுளை:

மாதுளை பழத்தை ஜூஸ் -ஆக செய்து , அதனுடன் கொள்ளையும் அரைத்து குடித்துவந்தால் கற்கள் கரைய வாய்ப்புள்ளது

அத்திப்பழம்:

அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்த பின்பு அதை ஆற வைத்து குடிக்க வேண்டும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும், நீங்களும் ஆரோக்கியமாக வாழலாம்.