Posts

Showing posts with the label சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்,

Image
சர்க்கரை நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்...   இன்றைய நவீன உலகில் பல்வேறு விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் தாக்கம் சற்றே கொடியாகவும், வலிமை மிக்கதாகவும் இருக்கிறது. உடலின் ஆற்றல் எந்த அளவுக்கு குறைந்து கொண்டே போகிறதோ, அதை விட பல மடங்கு அவற்றின் தன்மை அதிகரிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோய் என்றால், அதை பற்றி இன்று அச்சம் கொள்ளத்தான் மக்கள் செய்கின்றனர். இந்த நோயின் கடின தன்மை உயர்வதால், இதை கண்டு பலர் பயப்படுகின்றனர்.   இது போன்ற நோய்களை நாம் சமாளிக்க தயாரா..? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. எந்த வித நோயாகினும் அதற்கென்று ஒரு சில குணப்படுத்த கூடிய வழிகள் இருக்கும். அந்த வகையில், இதனை சரி செய்ய நம் முன்னோர்களின் சில முக்கிய பயிற்சிகள் உதவும். சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய முக்கியமான ஆசன பயிற்சிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து நலம் பெறலாம் நண்பர்களே.   கொடிய நோயா..? உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் என்றால், அது நீரிழிவு நோய்தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நோய்கள் இன்றி வா

சர்க்கரை நோய்க்கு ஆவாரம் பூ சாப்பிடலாமா, ஆவாரம்பூ சர்க்கரை நோய்

Image
  சர்க்கரை நோயா? எப்பவும் ஆரோக்கியமாக இருக்க ஆவாரை சாப்பிடுங்க!   உலகை அச்சுறுத்தி வரும் தீரா நோய்களில் நீரிழிவுக்கு தனி இடம் உண்டு. நீரிழிவு வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். பலரும் செய்யும் தவறுகள் இதை கட்டுப்படுத்தவும் தவறிவிடுவதுதான். நீரிழிவை கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் இருந்தாலும் கூட உணவு வகைகளிலும் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும். அதோடு மருந்தே உணவாய் இருக்ககூடிய உணவு வகைகளையும் தவறாமல் எடுத்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஆவாரை அற்புத மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து என்றே சொல்லலாம். ஆவாரை குறித்தும் நீரிழிவுக்கும் தரும் பலன்களை குறித்தும் பார்க்கலாம். ஆவாரை “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள். ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக் குணங்களைகொண்டவை. உடலில் அதிகமாகும் சூட்டை குளிர்ச்சிபடுத்த உதவும். உடலில் உச்சந்தலையில் சூட்டை உணராமல் இருக்க ஆவார இலையை தலையில் போட்டால் போதுமானது. உச்சந்தலையில் சூடு இறங்காது.