சர்க்கரை நோயை
முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்...
இன்றைய நவீன உலகில் பல்வேறு
விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் தாக்கம் சற்றே கொடியாகவும்,
வலிமை மிக்கதாகவும் இருக்கிறது. உடலின் ஆற்றல் எந்த அளவுக்கு குறைந்து கொண்டே
போகிறதோ, அதை விட பல மடங்கு அவற்றின் தன்மை அதிகரிக்கிறது. குறிப்பாக நீரிழிவு
நோய் என்றால், அதை பற்றி இன்று அச்சம் கொள்ளத்தான் மக்கள் செய்கின்றனர். இந்த
நோயின் கடின தன்மை உயர்வதால், இதை கண்டு பலர் பயப்படுகின்றனர்.
இது போன்ற நோய்களை நாம் சமாளிக்க தயாரா..? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது.
எந்த வித நோயாகினும் அதற்கென்று ஒரு சில குணப்படுத்த கூடிய வழிகள் இருக்கும். அந்த
வகையில், இதனை சரி செய்ய நம் முன்னோர்களின் சில முக்கிய பயிற்சிகள் உதவும்.
சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய முக்கியமான ஆசன பயிற்சிகளை பற்றி இந்த பதிவில்
தெரிந்து நலம் பெறலாம் நண்பர்களே.
கொடிய நோயா..?
உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய
நோய் என்றால், அது நீரிழிவு நோய்தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான
அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள்
காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு' என்ற காலத்தை நாம்
உருவாக்கி கொண்டிருக்கிறோம். நம்முடைய அனைத்து பழக்க வழக்கங்களும் நோய்களுக்கான
வழி முறைகளை வகுத்து கொண்டே போகிறது.
சர்க்கரை நோயின் பாதிப்பு...
கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycaemic
index) உடலில் உள்ள கார்போஹைட்ரட்டின் அளவை பொருத்து நம் உடலில் எவ்வளவு க்ளுகோஸ்
உள்ளது என்பதை நிர்ணயிக்கும். உடலில் இன்சுலின் அளவு குறைத்திருந்தால் அது
சர்க்கரை நோயாக கருதுகின்றோம். இன்சுலின் அளவை எவ்வாறு உயர்த்தலாம் என்று
பார்த்தால் அதில் முதன்மையான பங்கு உணவிற்கும், கடைபிடிக்க கூடிய முறைகளிலும்
இருக்கிறது.