Posts

Showing posts with the label கருத்தரித்தல்

கருத்தரித்தல் செயல்முறை

Image
  பெண் எப்படி கருவுருகிறாள்?   கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்துவும், கருவும் இணையும் அந்த நிகழ்வு அனைவருக்கும் எளிதாக நடந்து விடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பல விஷயம் சரியாக நடக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும். பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் செயல்பாடு நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். கரு உருவாகுதல் மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளில் (இரத்தப்போக்கு ஏற்படும் நாள்) சிலர் ஹார்மோன்கள் புதிய கருமுட்டைகளில் வளர்ச்சி உண்டாக்குவதற்காக இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இதனால் தான் கருப்பையின் அண்டகத்தில் புதிய கரு உருவாகும். கருப்பை தயார் ஆகும் நிலை கருமுட்டை வளர்ச்சி அடைய ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் வெளிப்படும். இயற்கையாக கருத்தரிக்க கருவும் விந்தும் இணைய வேண்டும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் தான் கருப்பை புறணி தூண்டப்படும். இது கருவில் பஞ்சு மெத்தை போன்ற ஒரு உருவாகி வளர உதவும். கரு முட்டை சில நாட்களில் கரு மு

கருத்தரித்தல் என்றால் என்ன

Image
கருத்தரித்தல் என்றால் என்ன?     ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சினைப்படுத்தும்போது கருத்தரித்தல் நிகழ்கிறது. மாதவிலக்கு காலத்தில் பெண்ணின் சினைப்பைகள் இரண்டில் ஒன்றில் இருந்து ஒரு சினைமுட்டை உருவாகும். இது பெரும்பாலும் மாதவிலக்கு சுழற்சி காலத்தில் 14 -15 தினங்களுக்கு முன் உண்டாகும். இதை Ovulation என கூறுவார்கள். இந்த காலத்தில் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சேர்ந்தால் கரு உண்டாகிறது. மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து 14 – 15 வது நாள்தான் சினை முட்டை வெளிவரும் நாளாகும். இந்த சினை முட்டை ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டும்தான். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவை அடையும் விந்தணு கருவாக உருமாறும். ஆணின் விந்துவில் கோடிக்கணக்கில் உயிரணுக்கள் இருக்கும். கோடிக்கணக்கில் உயிரணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு உயிரணு தான் வெற்றி பெறும். உடனே , மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகி மூடி விடும். இப்போது உயிரணுவும் , சினை முட்டையில் இருக்கும் கருவும் சேர்ந்து , பெண் கர்ப்பம் அடைகிறாள். மற்ற விந்தணுக்கள் தானாக அழிந்துவிடும்.   சினைகுழாயி