Posts

Showing posts with the label கருத்தரித்தல்

கருத்தரித்தல் காலம்

Image
  கருத்தரிப்பதற்கு சரியான நாள் எது? கருமுட்டை வெளிவரும் நாளை எவ்வாறு கணக்கிடுவது?   தம்பதிகள் எந்த நாள்களில் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.   தம்பதிகள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த

கருத்தரித்தல்

Image
எளிதில் கருத்தரிக்க சில வழிகள்!   அந்தக்காலத்தில் எல்லாம் பெண்களால் பல குழந்தைகளை எளிதில் பெற்றெடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களும் தான்.   ஆனால் அத்தகைய மருந்துகளின் உதவியின்றியும் இந்தக் காலத்திலேயும் எளிமையாக கருத்தரிக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். என்ன தான் கடைகளில் நாவிற்கு சுவையை தரக்கூடிய வகையில் உணவுப் பொருட்கள் விற்கப்பட்டாலும், அதனை வாங்கி உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தாலேயே, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுடன், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கலாம். இந்தக் கட்டுரையில் எந்த ஒரு மருந்துகளின் உதவியின்றியும் எளிதில் கருத்தரிப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கருத்தரிக்கலாம்.   ஆரோக்கியமான டயட் கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க, தம்பதிகள் இருவரும் நல்ல ஆரோக்கியமான உணவுப