கருத்தரித்தல் என்றால் என்ன
கருத்தரித்தல் என்றால் என்ன?
ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சினைப்படுத்தும்போது
கருத்தரித்தல் நிகழ்கிறது. மாதவிலக்கு காலத்தில் பெண்ணின் சினைப்பைகள் இரண்டில்
ஒன்றில் இருந்து ஒரு சினைமுட்டை உருவாகும். இது பெரும்பாலும் மாதவிலக்கு சுழற்சி
காலத்தில் 14 -15 தினங்களுக்கு
முன் உண்டாகும். இதை Ovulation என கூறுவார்கள். இந்த காலத்தில்
ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சேர்ந்தால் கரு உண்டாகிறது.
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து 14 – 15 வது நாள்தான் சினை
முட்டை வெளிவரும் நாளாகும். இந்த சினை முட்டை ஆயுட்காலம் ஒரே ஒரு நாள்
மட்டும்தான். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவை அடையும்
விந்தணு கருவாக உருமாறும். ஆணின் விந்துவில் கோடிக்கணக்கில் உயிரணுக்கள்
இருக்கும். கோடிக்கணக்கில் உயிரணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு உயிரணு தான் வெற்றி பெறும்.
உடனே, மற்ற உயிரணுக்கள்
உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகி மூடி விடும். இப்போது
உயிரணுவும், சினை
முட்டையில் இருக்கும் கருவும் சேர்ந்து,
பெண் கர்ப்பம் அடைகிறாள். மற்ற விந்தணுக்கள் தானாக அழிந்துவிடும்.
சினைகுழாயில் (Fallopian Tubes) உள்ள விரல்கள் போன்ற அமைப்பு சினை முட்டையை
கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கொண்டு செல்லும். இந்த நேரத்தில் ஆணின் விந்தணு எளிதாக
கருப்பைக்குள் நுழைந்து விடும். சிறிது நேரத்தில் விந்தணு கருப்பைக்குள்ளும்,
சினை குழாய்க்குள்ளும் நகர்ந்து சென்று விடும். இவ்வாறு
சினைப்படுதல் (Fertilisation) உண்டாகிறது. அவ்வாறு அந்த
குறிப்பிட்ட காலத்திற்குள் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சேராவிட்டால் சினை முட்டை
அழிந்து போய் கருப்பை வழியாக அடுத்த மாதவிலக்கின் போது வெளியேறிவிடும்.
சினைகுழாய்க்குள் இருக்கும் பந்து போன்று அமைப்பு கருபதிந்த
சினைமுட்டையை 3-5 நாட்கள் இடைவெளியில் கருப்பையை சென்று அடையும். அவ்வாறு
கருப்பையை அடைந்த சினை முட்டை கருப்பையில் ஒட்டிக் கொள்ளும். இதை ‘பதிதல்’
என்பார்கள்.
கருப்பை சுவருடன் ஒட்டி கொண்ட சினைமுட்டை சற்று தடிமனாக
இருக்கும். உட்புறத்தில் இருக்கும் செல்கள் கருவாக உருவெடுக்கும். வெளிப்புறத்தில்
இருக்கும் செல்கள் நச்சுகொடியாக உருமாறும். இதுதான் குழந்தையை தாயுடன் இணைக்கும்
பாலமாக செயல்படுகிறது. இந்த நச்சு கொடி மூலமாகத்தான் குழந்தைக்கு தேவையான
ஆக்ஸிஜனும், மற்ற சத்துக்களும் குழந்தையை சென்று அடையும். இது தான்
குழந்தையின் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
இந்த நச்சுக்கொடி தான் HCG என்னும் நீரை உருவாக்கி சினை முட்டைகள் மேலும் உருவாவதை தடுக்கிறது. இந்த நீர் தான் கர்ப்ப காலத்தில் மாத விடாய் ஏற்படுவதை தடுத்து நிறுத்துகிறது. கரு உருவான 10 முதல் 12 நாளில் பனிக்குடம் உருவாகிறது. இது பனிநீரில் சூழ்ந்திருக்கும். கரு இதில் மிதந்தபடி வளரும். இப்படி தான் கரு உண்டாகி தாயின் வயிற்றில் வளர்கிறது.
கர்ப்பமானதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி.
மருந்து கடைகளில் விற்கப்படும் பிரசவ (Pregnancy) கிட்டை வாங்கி சோதித்து
வீட்டிலேயே கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ளலாம். பிறகு, மகப்பேறு மருத்துவரை சந்திந்து
சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். சில
நேரங்களில் ஹார்மோன் சம்பந்தமான சில பிரச்சனைகளால் மாதவிலக்கு தள்ளிப் போகலாம்.
அதனால் மருத்துவரை அணுகி சிறுநீர், இரத்த மற்றும் உட்புற பரிசோதனை செய்து
கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
முன்பெல்லாம் கர்ப்பமானதை உறுதிப்படுத்த குறைந்தது 40 நாட்களாவது காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் தற்போதைய வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தில் மாதவிலக்கு தள்ளி போன இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவத்துறை இப்போது வளர்ந்து விட்டது.
குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்
சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)
மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.
மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள
Office Address
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001,
Tamilnadu, India.
Whatsapp & Call 1: +91-9025047147.
Whatsapp & Call 2: +91-9629457147.
நன்றி