Posts

Natural Rose Lip Balm

உங்களுடைய உதடு 24 மணி நேரமும் ரோஜா இதழ் போல இருக்கும் .  இயற்கையான அழகைத் தரும் இந்த லிப்பாமை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி? சாதாரணமாக பெண்கள் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்லும் போது லிப்ஸ்டிக் போடுவது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாமல் வெளியில் எங்கும் செல்வதே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு இந்த லிப்ஸ்டிக் பெருகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல இப்போதெல்லாம் பெண்கள் வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக லிப்ஸ்டிக் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் ஒரு படி மேலே போய் லிப் பாம் உபயோகப்படுத்த தொடங்கி விட்டார்கள். லிப் பாம் என்பது வெறும் அழகுக்கான சாதனமாக மட்டும் கருதக்கூடாது. இது உதட்டின் வறட்சித் தன்மையை நீக்கி உதட்டை மென்மையாக வைத்திருக்க போடுவது. குளிர்காலம் தொடங்கி விட்டாலே உதடுகள் வறண்டு ஈரத்தன்மை இழந்து காணப்படும். இதுபோன்ற சமயங்களில் லிப் பாம் கட்டாயமாக உபயோகப்படுத்தலாம். உதடு வறட்சி இல்லாமல் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த லிப் பாம்களை உபயோகப்படுத்துவதால் சிலருக்கு அலர்ஜி போன்றவைகளும் கூட ஏற்படும்.  எனவே