Posts

அடிக்கடி சத்தமா வாயு பிரியுதா? நாற்றமும் வீசுதா?

அடிக்கடி சத்தமா வாயு பிரியுதா? நாற்றமும் வீசுதா? இதுல ஏதாவது ஒண்ணு சாப்பிடுங்க... நாற்றம் வீசாது... வாயுத் தொல்லையும் வயிறு மந்தம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏராளமானோருக்கு இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் அதனால் ஏற்படும் ஜீரணக் கோளாறுகளும் தான். இவற்றை மருந்துகள் எதுவும் இல்லாமல் வீட்டில் உள்ள மிக எளிமையான பொருள்களை வைத்து எப்படி சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம். வாயு பிரிதல் எல்லோருக்கும் உண்டாகிற இயல்பான விஷயம் தான். ஆனால் பலருக்கு பலத்த சத்தத்துடன் வெளியேறும், சிலருக்கு வெளியேறுவதே தெரியாது. சிலருக்கு பயங்கர துர்நாற்றத்துடன் பிரியும். இவை எல்லாவற்றிற்குமே அடிப்படையாக இருக்கும் ஒரு காரணம் என்னவென்றால், அஜீரணக் கோளாறு தான். எடுத்துக் கொண்ட உணவுகள் சரியாக ஜீரணமாகாமல் இருக்கும். ஜீரணமாகாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கீழ்வரும் சில பொருள்களை வைத்து சரிசெய்ய முடியும். துர்நாற்றமில்லாமல் வாயு பிரியும். ​ வாயு தொல்லையை போக்கும் ஓமம் : வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பத