Posts

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்

கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்.. ! * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை * வலி, வீக்கம் (Anti-inflammatory) போக்கும் தன்மை * காய்ச்சலை போக்கும் தன்மை * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator) * கண்புரையிலிருந்து பாதுகாக்கும் தன்மை மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:- * ஒரு கைப்பிடி துளசி இலைக் கொழுந்துடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவான மாத்திரைகளைச் செய்து காய வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு மாத்திரை நசுக்கி, தேனில் கலந்து, குழைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமல் உடனடியாக குறையும். * துளசி இலையை இலேசாக அவித்து 5 மி.லி. அளவுக்குச் சாறு எடுத்து காலை, மாலை வேளைகளில் ஒரு வாரம் வரை குடித்தால் தீராத சளித் தொல்லைகள் தீரும். * ஐந்து கிராம் துளசி இலையை, இரண்டு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மற்றும் மாலை வேலைகளில் வெந்நீரில் சேர்த்து குடித்தால் தீராத காய்ச்சல்

நீங்கள் அறிந்திராத அற்புதங்களை வழங்கும் கொய்யா பழம்...

நீங்கள் அறிந்திராத அற்புதங்களை வழங்கும் கொய்யா பழம்... மற்ற பழ வகைகளை விட விலை மலிவாகக் கிடைக்கும் பழமாகக் கொய்யா பழம் இருக்கிறது. இதனாலோ என்னவோ இதனைப் பலரும் அலட்சியமாக்கி விடுகின்றனர். ஆனால் மற்ற பழ வகைகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்த பழமாகக் கொய்யா இருக்கிறது. இது தவிரக் கொய்யா பழம் வழங்கும் மற்ற பயன்களை இங்குப் பாருங்கள்..     நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கொய்யாப் பழம் அதிகரிக்கிறது. சிலருக்குத் தொடர்ச்சியாகத் தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் இரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாகத் தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் இரத்தத்தைச் சுத்திகரித்துத் தலைவலிக்கான மூலகாரணத்தைச் சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறையச் சாப்பிடலாம்.    நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் இரத்தத்தை நன்றாகச் சுத்திகர