Posts

Showing posts with the label சைனஸ் குணமாக

சைனஸ் சித்த மருத்துவம், சைனஸ் இயற்கை மருத்துவம்

  சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட  உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா?   சைனஸ் பிரச்சனையானது இப்போது பெரும்பாலரை தாக்கியுள்ள ஒரு நோயாகும். அதுவும் குறிப்பாக பனிக்காலத்தில் இதனால் பலர் அவதிப்படுகின்றனர். இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது. நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது. நமது தினசரி வாழ்க்கையில் பெரும் தொல்லை தரும் இந்த சைனஸ் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றியும், இதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் என்ன என்பது பற்றியும் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.   அறிகுறிகள் இந்த சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளாவன, காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் போன்றவையாகும்.   துளசி துளசி நமக்கு நன்றாக தெரிந்த ஒரு மூலிக

சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  சைனஸ் பிரச்சினை இருக்கா?  இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.!   உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வரிசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு சைனஸ் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.   தவிர்க்க வேண்டிய உணவுகள் சைனஸ் அறிகுறிகளை அதிகமாக்கும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். வறுத்த மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள், அரிசி, இறைச்சி மற்றும் காரசாரமான மசாலாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். விட்டமின்-A செறிந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சைனஸ் தொற்றுக்கு எதிராக பலமான எதிர்ப்பாற்றலை உருவாக்க

சைனஸ் நாட்டு மருத்துவம்

  சைனஸ் பிரச்னைக்கு இந்த இயற்கை வைத்தியம்தான்  உடனே கேட்குமாம்...   சைனஸ் பிரச்சினை மிக இளம் வயதிலேயே நிறைய பேருக்கு வந்துவிடுகிறது. இதற்குக் காரணம் அதிக மாசு, அலர்ஜி, ஆரோக்கியமற்ற உணவு என பல காரணங்கள் உண்டு. அவற்றிலிருந்து வேகமாக விடுபட கீழ்கண்ட வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்.   சாதாரணமாக மூக்கடைப்பு வந்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் நம்மை பாடுபடுத்திவிடும். ஆங்கில மருந்துகளை எவ்வளவு தான் எடுத்துக் கொண்டாலும் சில இயற்கையான வீட்டு சிகிச்சைகள் ஆற்றல்வாய்ந்த பலன்களை கொடுப்பதை   இங்கு பயன்படுத்திப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவற்றைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளலாம். ​சைனஸ் என்பது என்ன? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்க குழிகளிலும் சளி நிரம்பி இருப்பதே ஆகும். இது ஒவ்வாமை, சளி, பாக்டீரியா தொற்று, போன்ற காரணங்களால் ஏற்படுகிறது, இதனால் மூக்கு அடைத்துக் கொள்ளுதல், சளித் தொற்று போன்றவை ஏற்படுகிறது. இது தலைவலி, மூக்கில் நீர் வடிதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது தீவிர நிலை அடையும் போது மூளைக்கா