சைனஸ் நாட்டு மருத்துவம்

 சைனஸ் பிரச்னைக்கு இந்த இயற்கை வைத்தியம்தான் 

உடனே கேட்குமாம்...

 

சைனஸ் பிரச்சினை மிக இளம் வயதிலேயே நிறைய பேருக்கு வந்துவிடுகிறது. இதற்குக் காரணம் அதிக மாசு, அலர்ஜி, ஆரோக்கியமற்ற உணவு என பல காரணங்கள் உண்டு. அவற்றிலிருந்து வேகமாக விடுபட கீழ்கண்ட வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். 

சாதாரணமாக மூக்கடைப்பு வந்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் நம்மை பாடுபடுத்திவிடும். ஆங்கில மருந்துகளை எவ்வளவு தான் எடுத்துக் கொண்டாலும் சில இயற்கையான வீட்டு சிகிச்சைகள் ஆற்றல்வாய்ந்த பலன்களை கொடுப்பதை  இங்கு பயன்படுத்திப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவற்றைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

​சைனஸ் என்பது என்ன?

சைனஸ் என்பது மூக்கின் இரு பக்க குழிகளிலும் சளி நிரம்பி இருப்பதே ஆகும். இது ஒவ்வாமை, சளி, பாக்டீரியா தொற்று, போன்ற காரணங்களால் ஏற்படுகிறது, இதனால் மூக்கு அடைத்துக் கொள்ளுதல், சளித் தொற்று போன்றவை ஏற்படுகிறது. இது தலைவலி, மூக்கில் நீர் வடிதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது தீவிர நிலை அடையும் போது மூளைக்காய்ச்சல், மூளை அயற்சி போன்றவற்றிற்கு வழி வகுக்கும். தீவிர சைனஸ் பொதுவாக 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதி தீவிர சைனஸ் 4 முதல் 8 வாரங்கள் நீடிக்கும். நாட்பட்ட சைனஸ் 8 வாரங்களுக்கு மேல் நீடிப்பதுடன் ஒரு வருடத்திற்குள் பலமுறை தாக்கி வீக்கத்தையும் ஏற்படுத்தும். நல்ல செய்தி என்னவென்றால் சில வீட்டு மருத்துவ சிகிச்சைகளை செய்வதன் மூலம் சைனஸிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

 

சைனஸ் பிரச்சனையை இயற்கையாக சமாளிக்க உதவும் ஏழு பயனுள்ள வீட்டு சிகிச்சைகளை இங்கே பார்க்கலாம்.

​நீர்ச்சத்துடன் வைத்திருங்கள்.

தண்ணீர், டீ, ஜுஸ் போன்றவற்றை சர்க்கரை இல்லாமல் குடிப்பதால் அது உங்கள் உறுப்புக்களை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். இந்த திரவ உணவுகள் சளியை கரைத்து எரிச்சல் கொடுக்கும் சைனஸிலிருந்து நிவாரணம் அளிக்கும். வறட்சிக்கு வழிவகுக்கும் ஆல்கஹால், கேஃபைன் மற்றும் புகைப்பிடித்தலை நீங்கள் தவிர்த்து விடவேண்டும்.

 

​காரசாரமான மசாலாக்கள்

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்ட கேயென்னி பெப்பர் போன்ற மசாலாக்கள் அடைத்துக்கொண்ட சளியை உடைத்து தேக்கத்தை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. அதே போல குதிரை முள்ளங்கியுடன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை ஜுஸ் ஆகியவற்றை கலந்து பயன்படுத்தும்போது அது சளியை கரைத்து நோய் நிவாரணியாக செயல்படுகிறது. இதற்குப் பதிலாக ஃப்ரெஷ்ஷாக துருவிய குதிரை முள்ளங்கியை சில நிமிடங்கள் வாயில் அடக்கி வைத்திருந்து அதன் காரம் குறைந்தவுடன் விழுங்கி விடலாம்.

 

​ஆவி பிடித்தல்

ஆவி பிடிப்பது மந்திரம் போல செயல்படுகிறது, இதை மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். 3 துளிகள் பெப்பர் மின்டுடன் 3 துளிகள் பைன் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யும் 2 துளி யூகலிப்டஸ் எண்ணெய்யும் ஒரு கிண்ணம் சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிக்கலாம் அல்லது 3 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் அத்துடன் தைம் மற்றும் பெப்பர்மின்ட் எண்ணெய் சேர்த்தும் ஆவிபிடிக்கலாம். தண்ணீரை நோக்கி முகத்தை வைத்து, தலையைச் சுற்றி ஒரு டவலை வைத்து மூடி, தண்ணீரிலிருந்து வெளியேறும் ஆவியை உள்ளே இழுக்கவும். இது சளியால் அடைத்துக் கொண்டிருக்கும் சுவாசப்பாதையை சுத்தமாக இது உதவும்.

 

​மஞ்சள் மற்றும் இஞ்சி வேர்

மஞ்சள் கிழங்கு அற்புதமான நறுமணம் கொண்ட இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இதில் ஏராளமான ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அடங்கியுள்ளன. இதை இஞ்சியுடன் கலந்து டீயாக சாப்பிடும் போது மூக்கடைப்பை திறந்து சைனஸ் அழுத்தத்தை விடுவித்து உடனடியாக நீங்கள் நன்றாக உணரச் செய்கிறது. ‘ஆயுர்வேத வீட்டு மருத்துவம்’ என்கிற புத்தகத்தில் இஞ்சி ஜுஸுடன் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து ஒரு நாளில் 2 முதல் 3 முறை எடுத்துக்கொள்வது நல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

​ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் ஏராளமான ஆரோக்கிய பயன்களை கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் பொருளாகும். ஒரு கப் சூடான நீர் அல்லது தேநீரில் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து தினமும் மூன்று வேளை குடித்தால் அதிகப்படியான சளியை நீக்கி மூக்கடைப்பை விடுவித்து சைனஸ் அழுத்தத்தை குறைக்கிறது சுவைக்காக இத்துடன் எலுமிச்சை சாறையும் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது வெறும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை மூன்று வேளை சாப்பிடுவது கூட நல்ல பயன்களை கொடுக்கும்.

 

​சூப்

மூக்கடைப்பை நீக்குவதில் சூப்புகள் மிக சிறப்பாக செயல்படுவதை பற்றி ஏராளமான ஆய்வுகள் ஆதரவு தெரிவிக்கின்றன. சிக்கன் சூப் முதல் காய்கறி சூப் வரை பிரஷ்ஷான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும்போது அற்புதமான பலன்களை தரும். அந்த டீயை தயாரிக்கும் போது வெளியாகும் ஆவியை உள்ளே இழுக்கும்போது பல வகை மூலிகைகளின் ஆற்றல் சைனஸ் அடைப்பை உடனடியாக விடுவிக்கிறது.

 

​மூக்கில் நீர்பாய்ச்சுதல்

மூக்கடைப்பை விடுவிக்க மூக்கில் நீர் விடும் முறை மிகவும் பயனுள்ளதாகும். இது சலைன் நீர் பாய்ச்சும் முறை என்று அறியப்படுகிறது. சலைன் கரைசலை மூக்கு துவாரங்களில் விட்டு மென்மையாக மூக்கை சுத்தம் செய்யும் முறை. அரை டீஸ்பூன் உப்பை அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து நீண்ட மூக்கு உடைய ஒரு கிண்ணத்தின் வழியாக மூக்கிற்குள் 5 துளிகள் விடவும். இப்படி செய்யும்போது தலையை ஒரு பக்கமாக சாய்த்து இருக்க வேண்டும்.

இதனால் ஒரு மூக்கின் வழியே விடும் தண்ணீரானது தொண்டை மூக்கு பாதையை சுத்தம் செய்து மற்றொரு மூக்கின் வழியே வெளியேறி விடும். இப்படி இரண்டு மூக்குத் துவாரங்களிலும் செய்யவேண்டும் என்று சொல்கிறார் ஆயுர்வேத வல்லுனர். இதுவும் சைனஸ் பிரச்சினைக்கு இதம் அளிப்பதோடு சுவாசப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களையும் சுத்தம் செய்துமூக்கில் எரிச்சலை குறைக்கிறது.