Posts

Showing posts with the label இதய நோய்கள்

இதய நோய்க்கு சித்த மருத்துவம்

Image
  தாமரைப்பூ, செம்பரத்தைபூ, மருதம்பட்டை...  இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்!   இதயம் காக்க என்ன செய்யலாம்? இன்று முக்கியமாக எழுந்திருக்கும் கேள்வி. `உலகில் இறப்பவர்கள் இருவரில் ஒருவர், இதய நோயால் இறக்கிறார்‘ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சரியான நேரத்துக்கு உணவு உண்ணாதது, உடற்பயிற்சி இல்லாதது, ஜங்க், ஃபாஸ்ட் என மாறிவரும் உணவுப்பழக்கம், புகை, மதுப்பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுவது இதய நோய். அதோடு, பிறவிக் கோளாறு காரணமாகவும் இதய நோய் ஒருவரை பாதிக்கலாம். நாம் ஒவ்வொருவருமே இதய நோய் விஷயத்தில் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். இன்றைக்கு இதயநோய்க்கான சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் வெகுவாக முன்னேற்றம் பெற்றுவிட்டன. அதே நேரத்தில், இதய நோய்க்கு ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்திலும் தீர்வுகள் உள்ளன. அது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்... அதிகப்படியாக இதயம் துடிப்பது, வலியோடு மயக்கம் உண்டாவது, நெஞ்சு படபடப்பு, வலி, இதயம் நின்றுவிடுவது... போன்ற அச்சமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். சிகிச்சை பெற வேண்டும்.

இதய நோய் குணமாக யோகா

Image
இதய நோய் உள்ளவர்கள் என்ன மாதிரியான யோகா செய்யலாம்?   யோகா என்பதற்கு தொடர்பு என்ற பொருள் உண்டு. உடல், மனம் மற்றும் ஆன்மீக பயிற்சி வழியாக உங்கள் ஆழ்மனதுடன் ஏற்படுத்தும் தொடர்பின் சித்தாந்தம் நமது பழம்பெரும் இந்திய நாட்டில் உதமாகியது. இந்து மதத்தில், புத்த மதத்தில் மற்றும் ஜைன மதத்தில் யோகா குறித்த பல்வேறு வகையான பாடங்களும், குறிக்கோள்களும் இருந்து வந்தாலும், நவீன உலகில் மிகவும் புகழ் பெற்று பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது யோகாவின் ஒரு கிளையான ஹத யோகா.   யோகாசனங்கள் ஹத யோகாவில் பெரும்பாலும் உடல் ஆரோக்கியம் தொடர்புடைய ஆசனங்கள் இடம்பெறுகின்றன. இந்த வகை ஆசனங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பது ஒரு முக்கிய செய்தியாகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மூச்சுப் பயிற்சி என்னும் பிராணாயாமம் மற்றும் தியானம் மற்றும் யோகா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையை பின்பற்ற மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.   இதய ஆரோக்கியத்திற்கு இந்த சிகிச்சை முறை உங்கள் இதய ஆரோக்கியத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது பின்வரும் வழிகளில் உங்கள் இதயத்தி