Posts

குழந்தைகளின் குடற்புழுக்கள் வயிற்றுப்புழுக்களை உடனே வெளியேற்ற !!

குழந்தைகளின் குடற்புழுக்கள் வயிற்றுப்புழுக்களை உடனே வெளியேற்ற !! இன்று அதிக அளவு குழந்தைகளை பரவலாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை குடற்புழு. சுற்றுப்புற சூழல் சுகாதாரம் மோசமாக இருக்கக்கூடிய இன்றைய சூழலில் சுய சுத்தம் குறைவதால் குடற்புழு தொல்லை ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் இளம் வயதினருக்கும் பெரியவர்களுக்கும் கூட ஏற்படலாம். இந்த புழுக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிக அளவு இனிப்புகள் உண்பது. காய்கறிகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது. கைகளை கழுவாமல் சாப்பிடுவது. நகங்களை சுத்தமாக இல்லாமல் அதிகமாக வளர்ப்பது போன்ற பிரச்சினைகளால் இந்த தொல்லை ஏற்படும். இந்த குடற்புழுக்களை எவ்வாறு இயற்கையான முறையில் வெளியேற்றலாம் மற்றும் உருவாகாமல் தடுக்கலாம் போன்ற வழிமுறைகளை பார்ப்போம். 1. பூசணி விதைகளை வாங்கி வந்து பொடி செய்து கொள்ளவும். பெரியவர்களாக இருந்தால் அரை டேபிள் ஸ்பூன் பூசணி விதை பவுடர் உடன் அரை ஸ்பூன் தேன் கலந்து இரவு படுக்கும் முன்பு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதுவே குழந்தைகளாக இருந்தால் கால் ஸ்பூன் பொடியுடன் கால் ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து  சாப்ப