Posts

புளியம்பழத்தின் மருத்துவ பயன்கள்

  புளியம்பழத்தின் மருத்துவ பயன்கள்.:   அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.   செரிமான ஆற்றல்.: புளியானது குளுமை அகற்றி, வாய்வு அகற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, ஊக்கமூட்டி. விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படும். ஊக்கமூட்டும். கனிந்த கனிகள் பூச்சிகளை அகற்றும், அஜீரணத்தைப் போக்கும் மிதமான பேதி மருந்தாகும். உடலைக்க

உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்?

உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்? நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும். அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 75ல் இருந்து 100 வரை இருக்க வேண்டும். அதை விட குறையும் பொழுது தான் தலைவலி, மூச்சு திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புக்கள் அனைத்தும் தோன்றும். இதனாலேயே தான் இன்று அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆக்சிஜன் குறைப்பாட்டை எவ்வாறு சரி செய்யலாம்??? பொதுவாக சமைக்காது உண்ண கூடிய உணவுகளில் ஆக்சிஜன் அளவை அதிகமாக்க கூடிய கனிமங்கள் நிறைய உள்ளன. தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். சீனி கலக்க கூடாது. ஏதாவது பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். பச்சை தேங்காய், ஊற வைத்த வேர்க்கடலை உண்ணுவது மிக நல்லது பீட்ரூட், கேரட் ஜூஸ் லெமன் கலந்து அருந்தலாம். பச்சை தக்காளியை கல் உப்பு நீரில் ஊற வைத்து பின் கழுவி தினமும் உண்ணலாம். பல்வேறு இரசாயனம் கலந்துள்ள மைதா, தூள் உப்பு, வெள்ளை சீனி, இறக்குமதி எண்ணெய்கள், பதப்படுத்திய உணவுகள் போன்றவற்