பல் கூச்சம் ஏற்படுவதை தடுக்கும் கடுகு எண்ணெய்....
பல் கூச்சம் ஏற்படுவதை தடுக்கும் கடுகு எண்ணெய்....
பெரும்பாலும் பற்களின் ஈறுகளில் தோன்றும் வீக்கம் மற்றும் எலும்பு இழப்பு இவற்றின் காரணமாக தான் பல் தளர்வுகளும் பல் கூச்சங்களும் உண்டாகின்றன. அதுமட்டுமல்லாமல் சரியான வாய்வழி சுகாதாரத்தினை பின்பற்றாமல் இருந்தாலும் பலவித பல் தொடர்பான பிரச்சினைகள் உண்டாகும்.
புகை பிடித்தல், மது அருந்துதல் இவற்றின் மூலமாக பற்களில் உள்ள எனாமல் எனும் மூலப்பொருட்கள் அழிந்து, பல் கூச்சம் மற்றும் பல் தளர்வு ஏற்படும். இந்த எனாமல் எனும் மூலப்பொருள் பற்களில் கவசமாக இருக்கும். இதற்கு பாதிப்பு ஏற்படும்போது நாம் பற்களை இழக்க நேரிடும்.
பற்கள் லேசாக ஆட்டம் காணும் போது, நாம் சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் பிறகு பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பல் பராமரிப்பு: தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை வாயினுள் வைத்து பற்களை சுற்றி நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இவ்வாறு வாயினுள் எண்ணெய்யை வைத்துக் கொண்டு 10 அல்லது 20 நிமிடங்கள் கொப்பளித்து பின்னர் வெதுவெதுப்பான சுடுநீரில் வாயினை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இவ்வாறு காலையில் எழுந்தவுடனும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாகவும் செய்து வர வேண்டும்.
நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அந்த நீரினால் தினமும் ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு எந்த வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
கடுகு எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அதனை பேஸ்ட் போல் குழைத்து கொண்டு கூச்சம் உள்ள பற்களின் மீதோ அல்லது ஆட்டம் கொண்டிருக்கும் பல் மீதோ தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து, பின்னர் வாரம் முறை செய்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.