செக்ஸ் ஆர்வத்தை மிக அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்

செக்ஸ் ஆர்வத்தை மிக அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூ

பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம். 

செக்ஸ் ஆர்வம் 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைபாடு என இனப்பெருக்க செயலில் மந்தம் காணப்படுவது அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறையும் பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடும் தான். இதற்காக இன்றைய இளைஞர்கள் மருத்துவரையும் வயாகரா மாத்திரையையும் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு மாற்று வழி இருக்கிறது. என்ன தெரியுமா?

ஆண்மைக் குறைபாடு

ஆண்மைக்குறைபாடு உண்டாகாமல் இருக்க சரியான அளவில் இயற்கை முறையிலான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுங்கள். அதேபோல் இயற்கை வைத்திய முறைகளின் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதுபோன்ற பிரச்சினைகளை சரி செய்வதோடு செக்ஸ் ஆர்வத்தையும் தூண்டிவிட முடியும். அதிக நேரம் கட்டிலில் விறைப்புத் தன்மையுடன் செயல்பட முடியும்.

இயற்கை உணவுகள் 

வயாக்ரா போன்ற மருந்துகள் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டுவதை விடவும் இயற்கையான நமக்குக் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்றவை அதிக அளவில் பாலியல் உணர்வைத் தூண்ட உதவி புரிகின்றன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவை பெரும்பாலும் நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒன்று தான். குறிப்பாக, அத்திப்பழம், சோம்பு, பாதாம், வால்நட், முருங்கைக்காய், மஸ்ரூம் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த பீட்ரூட். அந்த பீட்ரூட் எப்படி பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

பீட்ரூட் ஜூஸ் 

பீட்ரூட் ஜூஸ் என்பது வயாகராவை விடவும் மிக வீரியமாக செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டது. பாலுணர்வைத் தூண்டுவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை விட மிக துரிதமாக பீட்ரூட் செக்ஸ் உணர்வைத் தூண்டும். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயது முதிர்வை அடைய அடைய பாலியல் இச்சையுணர்வோ அல்லது கட்டிலில் உங்களுடைய செயல்பாடோ குறைவதாகவோ அல்லது விறைப்புத் தன்மை குறைவாக இருந்தாலோ நீங்கள் இந்த பீட்ரூட் ஜூஸை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் இருபத்தைந்து வாலிபர் புான்ற வீரியமும் விறைப்புத் தன்மையும் பெற்றுவிட முடியும்.

விறைப்புத்தன்மை 

சிலருக்கு புகைப்பழக்கம், அதிகமாக மது அருந்துதல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால், விறைப்புத் தன்மை அதிக நேரம் நீடிக்காமல் இருக்கும் பிரச்சினை உண்டாகும். அதற்கு இந்த பீட்ரூட் ஜூஸ் உண்மையிலேயே மிக நல்ல தீர்வாக அமையும்.


ஆணுறுப்பில் ரத்த ஓட்டம்

ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் அதிகமாக இல்லாமல் குறையும் பொழுதுதான் அங்குள்ள நரம்புகள் சுருங்க ஆரம்பிக்கும். விறைப்புத்தன்மை குறைபாடு உண்டாகும். இந்த பிரச்சினை இருந்தால் கண்டிப்பாக, பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள். அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். ஆணுறுப்புக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்வைத் தரும். குறிப்பாக, பீட்ரூட்டில் அதிக அளவில் நைட்ரேட் இருப்பதால், அது இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமலும் ஆணுறுப்புக்கு ரத்தத்தை வேகமாக எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

வீரியம் அதிகரிக்கும் 

கட்டிலில் சில ஆண்கள் என்னதான் செக்ஸ் உணர்வு மேலோங்கியிருந்தாலும் உடலளவில் மிக வேகமாக சோர்வடைந்து விடுவார்கள். அது ஆண், பெண் இருவருக்குமே சங்கடத்தை உண்டாக்கிவிடும். ஆனால் அதையும் இந்த பீட்ரூட் ஜூஸ் தான் தீர்த்து வைக்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்து, கட்டிலில் உடலுறவில் நீண்ட நேரம் களைப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த சுறுசுறுப்பு உடலுறவின் போது, ஆண், பெண் இருவருக்குமே ஆர்வத்தையும் அதிக அளவிலான எதிர்பார்ப்பையும், புதிய புதிய விஷயங்களை செய்து பார்க்கும் முயற்சியும் அதிகரிக்கும்

சர்க்கரை நோயாளிகள் உடலில் குளுக்கோஸ் அளவை இது மிகவும் சீராக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடலுறவில் கொஞ்சம் சரிவர செயல்படாத நிலை இருக்கும். அல்லது மிக மெதுவாக இருப்பார்கள். மிக விரைவாக களைப்படைந்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயனளிக்கும். சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும். பீட்ரூட் இனிப்பாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இனிப்பாக இருந்தாலும் பீட்ரூட்டில் குளுக்கோஸ் அளவு குறைவே. அதனால் தாராளமாக குடிக்கலாம். இதிலுள்ள பீட்டாலேன் மற்றும் லியோ பீட்டானின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயால் உண்டாகும் மன அழுத்தமும் சோர்வும் கட்டுப்படுத்தப்படும்

பெண்களுக்கு 

ஆணுறுப்பு விறைப்புத்தன்மை, ஆண்மை பற்றியே பேசுகிறீர்கள். பெண்களைப் பற்றி பேசுவதே இல்லை என்று நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீங்க. அதைத்தான் இப்போ பார்க்கப் போகிறோம். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இந்த பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது. ஆண்களைப் போலவே பெண்களையும் கட்டிலில் எளிதில் களைப்படைய விடாமல் வேகமாகவும் நீண்ட நேரமும் செயல்பட உதவுகிறது. 

எவ்வளவு குடிக்கலாம்? 

செக்ஸ் உணர்வைத் தூண்டும், அதிகப்படுத்தம் என்பதற்காகவே மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடித்தாலே போதுமானது.