ஆண்களின் பாலியல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் சுக்கு பால் -

ஆண்களின் பாலியல் பிரச்சினைகளை  முடிவுக்கு கொண்டு வரும் சுக்கு பால்

தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் அவசரமான உலகில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக திருமணமான தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஏனெனில் அதிக மன அழுத்தம் கொள்வதால் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. பல ஆண்கள் பாலுணர்ச்சி குறைபாட்டை சந்திக்கிறார்கள். ஆண்களின் இந்த பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க நம் வீட்டு சமையலறையில் ஏராளமான மருந்து பொருட்கள் உள்ளன.

அதில் ஒன்று தான் சுக்கு. இந்த சுக்கு என்பது வேறொன்றும் இல்லை காய்ந்த இஞ்சி. ஆயுர்வேதத்தில் சுக்கு பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க பயன்படுகிறது. சுக்கு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

இந்த சுக்கு பொடியை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, இது பாலியல் பிரச்சினைகளைப் போக்கி, தாம்பத்திய வாழ்க்கையை இனிமையாக்குகிறது. பாலை சூடாக குடிக்கும் போது, அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். அதையே குளிர்ந்த நிலையில் குடிக்கும் போது குளிர்ச்சியாக்கும்.

பொதுவாக பால் ஜீரணமாக கடினமாக இருக்கும் மற்றும் இது உடலில் வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது. ஆயினும் பாலில் கால்சியம், புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், பால் ஆரோக்கியமான பானமாக திகழ்கிறது.

பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க எப்போது சுக்கு பாலை குடிக்க வேண்டும்?

பாலியல் பிரச்சினைகளை சந்திக்கும் ஆண்கள், தினமும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான சுக்கு பாலைக் குடிப்பது நல்லது. இப்படி குடிக்கும் போது ஆண்களின் பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, வாழ்க்கைத் துணையுடனான தாம்பத்திய உறவு நன்றாக இருக்கும். இப்போது சுக்கு பால் குடிப்பதால் பெறும் பிற நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

செரிமான பிரச்சனைகள்:

சுக்கு பாலை ஒருவர் குடித்து வந்தால், அது செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாய்வு தொல்லையால் கடுமையான வயிற்று வலியை சந்திப்பவர்கள், அந்த வலியில் இருந்து விடுபடுவார்கள்.

மூட்டு வலி:

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு பால் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சுக்கு பால் உடலில் உள்ள வாதத்தை நீக்கும். ஏனெனில் உடலில் வாதம் அதிகம் இருந்தால் தான் மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகளை கொண்டவர்கள் சுக்கு பாலை குடித்தால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தொண்டை வலி மற்றும் காய்ச்சல்:

தொண்டை வலி அல்லது தொண்டை கரகரப்புடன் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சுக்கு பாலைக் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் சுக்கில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது சளி, இருமல், மூக்கு ஒழுகல், தொண்டை வலி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

நச்சுக்கள் நீங்கும்:

உடலில் உள்ள நச்சுக்களை எளிய வழியில் வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய விரும்பினால், சுக்கு பாலைக் குடிக்கலாம். ஏனென்றால், சுக்கு பால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதோடு, உடலைக்கு வேண்டிய சத்துக்களையும் வழங்கி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சுக்கு பால் தயாரிப்பது எப்படி?

 முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
 பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/4 டீஸ்பூன் சுக்கு பொடி மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், சுவையான சுக்கு பால் தயார்.