ஹீமோகுளோபின் அளவை கூட்ட உதவும் கருப்பட்டி!!

ஹீமோகுளோபின் அளவை கூட்ட உதவும் கருப்பட்டி!!

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமிக் இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்தசோகை பிரச்சினை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.

நமது உடலை போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது.

கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கருப்பட்டி அல்லது பனை வெல்லம் ஒற்றை தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு கருப்பட்டியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டி சேர்த்து குடிப்பதன் மூலமும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.

உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெற செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சினை வராமல் இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கருப்பட்டியை உணவில் சேர்ப்பதன் மூலம், குழந்தைக்கு சுத்தமான தாய்ப்பால் கிடைக்கும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.