கீவாநெல்லி or கீழ்காய்நெல்லி மூலிகையின் மருத்துவ பலன்கள்...:

 கீவாநெல்லி or கீழ்காய்நெல்லி மூலிகையின் மருத்துவ பலன்கள்...:


 கீவாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக இரத்தப்போக்கு நிற்கும்.

கீவாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும் .

கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை  நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.

கீவாநெல்லியை எடுத்துக் கொள்ளும் முறை:

மஞ்சள் காமாலை :

கீவாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய் :

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

உடற்சூடு மற்றும் தொற்று நோய்கள் :

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.

வயிற்றுப்புண் :

1 டம்ளர் மோரில்,  கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.

தலைவலி :

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

சொறி, சிரங்கு :

கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.

வெள்ளைப்படுதல் :

கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
கீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.