இந்த மூலிகைகள் பல வயாகரா மாத்திரைக்கு சமம்!! நரம்பு தளர்ச்சியும் கூட சரியாகும்

இந்த மூலிகைகள் பல வயாகரா மாத்திரைக்கு சமம்!! நரம்பு தளர்ச்சியும் கூட சரியாகும் 

இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது உள்ள மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் தான். நரம்பு தளர்ச்சி பிரச்சினை ஏற்பட்டால் நம்மால் ஒரு வேலையை எளிதாக செய்ய முடியாது. எப்பொழுதும் சோர்வாகவே உணர நேரிடும். அதுமட்டுமின்றி செய்யும் வேலையில் கவனம் இல்லாமலும் மேற்கொண்டு நினைவு சக்தியை குறைக்கவும் தொடங்கும். 

மூளை கூறும் செய்தியானது சரிவர நரம்புகளுக்கு சென்றடையாமல் தேய்மானம் ஏற்படும்பொழுது அடுத்தடுத்த பிரச்சினையை சந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சில ஆண்களின் முறையற்ற பழக்க வழக்கங்களினால் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனை உண்டாகிறது. அவர்களால் தாம்பத்தியதில் சரிவர ஈடுபடவும் முடியாது. இதனை நாம் ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டறிந்தால் உணவு மூலமே சரி செய்து விடலாம்.இருப்பினும் இந்த பதிவில் வருவதை பின்பற்றியும் குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

அமுக்கிரா கிழங்கு 1/2 கிலோ
தண்ணீர் விட்டான் கிழங்கு 1/2 கிலோ
பாதாம் பருப்பு 100 கிராம்
முந்திரி பருப்பு 100கிராம்
அக்ரூட் பருப்பு 100கிராம்
சிறுபருப்பு 100கிராம்
சாரப்பருப்பு 100கிராம்
வெள்ளரி விதை 100கிராம்
ஏலக்காய். 25கிராம்

செய்முறை:

எடுத்து வைத்துள்ள அமுக்கிரா கிழங்கு மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றை பாலில் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வேகவைத்த கிழங்குகளை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

இந்த கிழங்குகள் வெயிலில் நன்றாக காய்ந்ததும் மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள பவுடரில் தினம்தோறும் ஒரு ஸ்பூன் என்ற வீதம் இரவு நேரத்தில் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்களுக்கு உள்ள நரம்புத் தளர்ச்சி பிரச்சினை முற்றிலும் நீங்கும்.