மன அழுத்தத்தை, பதட்டத்தை குறைக்கும் அஸ்வகந்தா மூலிகை
மன அழுத்தத்தை, பதட்டத்தை குறைக்கும் அஸ்வகந்தா மூலிகை
அஸ்வகந்தா மன அழுத்த பண்புகளுக்கு பெயர் போன ஒரு மூலிகை. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதற்கு பன்மடங்கு உதவி புரியும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா என்ற மூலிகையில் அதிக பலன்கள் நிறைந்து இருக்கிறது. எனினும் இதனை சாப்பிடுவதற்கு முன்பு ஒருவர் கட்டாயமாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையை பெறுதல் வேண்டும். இப்போது அஸ்வகந்தா மூலிகையின் பலன்கள் பற்றி அறிவோம்.
ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது
அஸ்வகந்தா மூலிகையை வழக்கமான முறையில் சாப்பிட்டு வருவது இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. இதன் காரணமாக இது வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பயனுள்ள ஒரு மூலிகையாக அமைகிறது.
தசை வளர்ச்சி மற்றும் அதன் வலிமையை அதிகரிக்கிறது
தசை வளர்ச்சி மற்றும் தசையின் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க அஸ்வகந்தா உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உடல் கொழுப்பு சதவீதத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.
கவனிப்புத்திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது
அஸ்வகந்தா சாப்பிடும் ஒரு நபரின் கவனிப்பு திறன் மற்றும் நினைவாற்றல் சிறந்த முறையில் இயங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது
இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தில் அஸ்வகந்தா மூலிகை பெரும் பங்கு கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் செயல்பாடுகளின் போது இதயம் மற்றும் நுரையீரலில் இருந்து தசைகளுக்கு செலுத்தப்படும் ஆக்ஸிஜனின் வேகத்தை அஸ்வகந்தா அதிகரிக்கிறது.
விந்தணுக்களின் தரத்தை உயர்த்த உதவுகிறது
அஸ்வகந்தா சாப்பிடுவது ஆண்களில் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1/4 - 1/2 டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை நெய், தேன் மற்றும் சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதத்திற்கு தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் அல்லது 1/4 - 1/2 டீ ஸ்பூன் ஒரு கிளாஸ் பாலில் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு தினமும் பருகி வரலாம்.