தினம் தினம் உங்கள் தலையில் புது முடி வளர்வதை பார்க்க ஆசைப்படுறீங்களா.

தினம் தினம் உங்கள் தலையில் புது முடி வளர்வதை பார்க்க ஆசைப்படுறீங்களா.

புசுபுசுன்னு உங்கள் தலை முழுவதும் அடர்த்தியாக முடி வளர்ந்து கொண்டே போகும். இந்த ஒரு ஹேர் பேக்கை போட்டால்!!

கேட்கவே இந்த வார்த்தை எவ்வளவு நல்லா இருக்கு. தினம் தினம் புதிய முடி வளர்வதா. நிச்சயம் வளரும். தொடர்ந்து ஒரு மாசம் இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால், உங்களுக்கும் முடி வளராத இடத்தில், வழுக்கையாக இருக்கும் இடத்தில் நெருக்கம் நெருக்கமாக புது முடிகள் வளர தொடங்கும். அதற்கான ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். புரோட்டின் சத்து நிறைந்த இந்த ஹேர் பேக்கை பின் சொல்லக்கூடிய முறையில் நீங்கள் தலையில் போட்டு வந்தால், நிச்சயம் அடர்த்தியாக முடியை வளர்த்து பின்னி போட்டுக்கலாம். வாங்க அந்த அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

முடி வளர்ச்சியை மூன்று மடங்கு அதிகரிக்கும் புரோட்டின் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு பச்சைப்பயிறு, உளுந்தம் பருப்பு, தேவை. முந்தைய நாள் இரவே இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து, 1/4 கப் பச்சை பயிரை, போட்டு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருக்கும் உளுந்தையும், பச்சைப்பயிரையும், போட்டு விழுது போல அறைத்தால் நைசாக பொங்க பொங்க அரைபட்டு நமக்கு கிடைக்கும்.

இதை கொஞ்சம் லிக்விட் ஆக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில் இதை அப்படியே ஊற்றி உங்கள் கையைக் கொண்டு பிழிந்து எடுத்தால், ஸ்மூதியான ஒரு கிரீம் போல ஹேர் பேக் கிடைக்கும். அதில் இரண்டு முட்டையின் வெள்ளை கருவை உடைத்து ஊற்றி அடித்து கலக்குங்கள்.

நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால் பாதாம் ஆயில் 2 டேபிள் ஸ்பூன், இதில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஆலிவ் ஆயில் அல்லது விளக்கு எண்ணெய் இந்த மூன்றில் ஏதாவது ஒரு எண்ணெயை முட்டைக்கு பதிலாக சேர்த்து, பேக்கை அடித்து கலந்து உங்களுடைய தலையில் படும்படி அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்யுங்கள்.

பிறகு 20 நிமிடம் கழித்து தலைக்கு மயில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு கசக்கி கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க. உங்களுடைய ஸ்கேல்புக்கு தேவையான புரோட்டின் சத்து முழுமையாக கிடைத்திருக்கும். வாரத்தில் இரண்டு நாள், என்ற கணக்கில் ஒரு மாதம் இந்த பேக்கை போட்ட பிறகு தினம் தினம் உங்களுடைய ஸ்கேல்பில் புது முடி வளர்வதை பார்க்கலாம்.

ஆனால் பேக் போடுவதை நிறுத்தக்கூடாது. ஒரு மாதத்திற்கு பிறகும் நீங்கள் தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வர, எலி வால் போல இருக்கும் உங்கள் முடி 6 மாதத்தில் இருந்து, ஒரு வருடத்திற்குள் குதிரைவால் போல மாறிவிடும். குறிப்பு தேவை என்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள். கூடவே சேர்த்து அந்த பச்சை பயிறு, முட்டை, பாதாம் பிஸ்தா, கீரை வகைகள் போன்ற புரோட்டின் சத்து அதிகம் நிறைந்த பொருட்களை உணவோடு சேர்த்து வாருங்கள். முடி 2 மடங்கு அல்ல 20 மடங்கு கூட வேகமாக வளரும்.