தினமும் ஒரு டீஸ்பூன்... ஒரு வாரத்தில் மூட்டு வலி சரியாகும்!!

 தினமும் ஒரு டீஸ்பூன்... ஒரு வாரத்தில் மூட்டு வலி சரியாகும்!!


கால்சியம் குறைபாடு மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிய காரணங்களால் பலருக்கும் மூட்டு வலி ஏற்படும். அவ்வாறு வலி இருப்பவர்கள் உணவு உண்பதற்கு முன் ஏழு நாள் இதனை சாப்பிட்டு வந்தால் போதும், எலும்பு தேய்மானம் கால்சியம் குறைபாடு மூட்டு வலி மலச்சிக்கல் என அனைத்திற்கும் ஒரே தீர்வாக இது அமையும்.

தேவையான பொருட்கள்:

ஆளி விதை -30 கிராம்

எள்ளு – 20 கிராம்

மஞ்சள் பூசணி விதை -20 கிராம்

காய்ந்த திராட்சை 10

செய்முறை :

ஆளி விதையில் அதிக அளவு மெக்னீசியம் சத்து உள்ளது. இது நமது எலும்பை உறுதி செய்ய பெரிதும் பயன்படும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. எள்ளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. குறிப்பாக ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எள்ளை எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணி விதையில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தசை பிடிப்பிற்கு மஞ்சள் பூசணி நல்ல ஒரு தீர்வு.

எடுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த திராட்சையும் எள்ளுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்து வைத்த பொடியை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதில் தேன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதனை குளிர்சாதன பெட்டி அல்லது வெளியில் கூட வைத்து பயன்படுத்தலாம். ஏழு நாள் முதல் பத்து நாள் வரை இது கெடாது. 

காலை உணவு சாப்பிடுவதற்கு முன் ஒரு வாரம் முழுவதும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். மலச்சிக்கல் மூட்டு வலி என அனைத்து பிரச்சினைகளும் விரைவில் குணமாகும்.
 

*தொடர்புக்கு*

K7HERBOCARE

84, பசுபதி நகர்,

தபால் தந்தி நகர் மெயின் ரோடு,

மதுரை-17.

போன் & வாட்ஸப் 1: 96294-57147

போன் & வாட்ஸப் 2: 90250-47147