சர்க்கரை அளவு 300க்கும் மேல இருக்கா? கொத்தமல்லி தண்ணிய குடிங்க... வேகமா குறையும்...

சர்க்கரை அளவு 300க்கும் மேல இருக்கா?  கொத்தமல்லி தண்ணிய குடிங்க... வேகமா குறையும்...

நீரிழிவு நோயைப் பொருத்தவரையில் இந்தியா தான் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நீரிழிவு நோய் உண்டாவதற்கு மிக முக்கியமான காரணமே வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகள் தான். ஆம். இது ஒரு வளர்சிதை மாற்ற நோய். இந்த நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் நிறைய மூலிகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கொத்தமல்லி விதை. கொத்தமல்லி விதை குடிநீரை தினமும் குடித்து வருவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வாங்க அந்த கொத்தமல்லி குடிநீர் எப்படி எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று பார்க்கலாம்.

நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அதற்கு வாழ்க்கை முறை மாற்றமும் உணவுப் பழக்கமும் முக்கியம். சர்க்கரை நோயாளிகள் மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் உணவும் உடல் செயல்பாடுகளும் தான். குறைந்த கார்போஹைட்ரேட் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம. அதோடு சில எளிய மூலிகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருகக முடியும்.

இ​ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி விதை :

இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க காலங்காலமாக ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொத்தமல்லி விதை பயன்படுகிறது.

இதிலுள்ள ஆன்டி - பைர்கிளைசெமிக் பண்பு நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது. கொத்தமல்லி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கொத்தமல்லி குடிநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்

கொத்தமல்லி விதை - 10 கிராம்,
தண்ணீர் - 2 லிட்டர்,

செய்முறை :

கொத்தமல்லி விதைகளை கொரகொரப்பாக லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள்)

ஒரு பெரிய பாத்திரத்தில் இந்த பொடியைச் சேர்த்து இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.

காலையில் அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை நாள் முழுக்க தண்ணீர் தாகம் எடுக்கும்போது குடித்து வரலாம்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் அளவு எடுத்து கொதிக்க வைத்து டீ போலவும் குடிக்கலாம் மீதமுள்ளதை நாள் முழுக்க குடித்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

கொத்தமல்லி விதையில்

வைட்டமின் ஏ,
வைட்டமின் ஈ,
வைட்டமின் கே,

ஆகிய வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. அதோடு

இரும்புச்சத்து,
மக்னீசியம்,
மாங்கனீசு,
ரிபோபிளவின்,
கால்சியம்,
தையமின்,
உள்ளிட்ட பல்வேறு மினரல்கள் அடங்கியிருக்கின்றன.

​கொத்தமல்லி நீரிழிவு நோயாளிகளுக்கு செய்யும் நன்மைகள்ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் :

கொத்தமல்லி விதையில் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் தன்மை உண்டு. இதில் நிறைய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. .இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இருக்கிற மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று ஜீரணக் கோளாறும் அதனால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் தான். அவற்றை சரிசெய்ய இந்த கொத்தமல்லி விதை குடிநீர் பயன்படுகிறது.

மருந்தை போல வேலை செய்யும் :

நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தி்ல் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு சில மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள்.

அப்படி மருந்துகள் செய்யும் அதே வேலையை இந்த கொத்தமல்லி விதை செய்யும் என்று சொல்வார்கள். நீரிழிவால் பாதிக்கப்பட்ட எலிக்கு 20 mg அளவு மருந்துகளும் கொடுக்கப்பட்டது.

அதேபோல சில எலிகளுக்கு கொத்தமல்லி விதை ஊவைத்த நீர் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் இரண்டு வகை எலிகளுக்குமே ரத்த சர்க்கரையின் அளவு ஒரே மாதிரியாக கட்டுக்குள் இருந்தது தெரிய வந்தது.

இன்சுலின் உற்பத்தியை தூண்டும் :

கொத்தமல்லி விதை இன்சுலின் உற்பத்தியைத் தூண்டவும் அவை செல்களுக்குச் சரியான அளவில் கிடைக்கவும் தூண்டுகிறது.

கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினை சரியான அளவில் பீட்டா செல்களுக்குக் கடத்த உதவுகிறது.