இளமை தரும் முந்திரி பால்!!!
இளமை தரும் முந்திரி பால்!!!
முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம்.
சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
இது
பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்று உணவுப் பொருளாகும். இதில் கேசின்
புரதம் இருப்பதில்லை. எனவே பாலினை அருந்துவதால் உண்டாகும் ஒவ்வாவை
ஏற்படுவதில்லை.
முந்திரி பால் கிரீம் கலரில்
பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். முந்திரி பாலானது
தாவரத்திலிருந்து பெறப்படும் பருப்பிலிருந்து தயார் செய்யப்படுகிறது.
எனவே தாவர உணவை மட்டும் உண்பவர்களால் இது பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
முந்திரி பாலினை தயார் செய்யும் முறை
ஒரு
கப் முந்திரி பாலினை தயார் செய்ய ¼ கப் முந்திரி பருப்பு தேவைப்படும்.
முந்திரி பருப்பினை நன்கு அலசி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்
முந்திரி பருப்புடன் ஒரு கப் தண்ணீரில் தேவையான தண்ணீர் சேர்த்து மைய
அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மீதமுள்ள தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.
பின்னர்
அதனை துணியால் வடிகட்ட வேண்டும். வடிந்து கீழே வரும் திரவமே முந்திரி பால்
ஆகும். இதனுடன் சுவைக்காக இலவங்கப் பட்டை பொடியும், வென்னிலா
சுவையூட்டியும் சேர்க்கலாம்.
இதனை குளிர்பதனப் பெட்டியில் 3-4 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
முந்திரி பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
முந்திரி
பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை கனிசமாகக்
காணப்படுகின்றன. இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்),
பி5(பான்டாதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள், இ, கே ஆகியவை உள்ளன.
முந்திரி பாலில் தாது உப்புகளான மெக்னீசியம், பாஸ்பரஸ், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, ஆகியவை கனிசமாகக் காணப்படுகின்றன.
மேலும்
இதில் செலீனியம், துத்தநாகம், பொட்டசியம், கால்சியம் ஆகியவையும் உள்ளன.
இதில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து,
நீர்ச்சத்து, அமினோ அமிலங்கள் போன்றவையும் இருக்கின்றன.
முந்திரி பால் – மருத்துவ பண்புகள் :
இதய நலத்திற்கு :
முந்திரி பாலானது இதய நலத்தினை மேம்படுத்துகிறது. முந்திரி பாலில் ஆலிவ் எண்ணெயில் உள்ளது போன்று ஒலியிக் அமிலம் காணப்படுகிறது.
ஒலியிக்
அமிலமானது இதய நோய்களுக்கு காரணமான டிரைகிளிசரைடுகளின் அளவினைக்
குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முந்திரி பாலினை அளவோடு உண்டு இதய
நலத்தை பேணலாம்.
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் ஆதாரம்
முந்திரி
பாலில் ஒமேகா 6 உள்ளிட்ட அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்
காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான தோலுக்கு வழிவகை செய்கின்றன. அத்துடன்
உடலில் உள்ள கொலஸ்ராலின் அளவினை கட்டுக்குள் வைக்கின்றன.
இரத்த அழுத்தத்தை சீராக வைக்க :
முந்திரி பாலில் காணப்படும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இரத்த அழுத்தம் சீரானால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.
எளிதாக செரிமானம் ஆக :
முந்திரி
பாலானது விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் தயிரினைவிட எளிதில்
செரிமானம் ஆகிறது. ஏனெனில் பாலில் உள்ளது போன்று லாக்டோஸ் மற்றும் கேசின்
புரதம் இதில் காணப்படுவதில்லை. எனவே இது எளிதில் செரிமானம் ஆகும்.
பித்தநீர்கட்டியைத் தடுக்க :
பித்தநீர்கட்டி
ஏற்படுவதை முந்திரி பாலானது தடை செய்கிறது. கொலஸ்ட்ரால் கடினமாவதால்
பித்தநீர்கட்டி உருவாகிறது. பித்தநீரில் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும்போது
அது கப் பரவுகின்றன.
மனஅழுத்தத்தைக் குறைக்க :
முந்திரி
பாலானது மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகச் செயல்படுகிறது. முந்திரி
பாலில் உள்ள எல் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலமானது நமது உடலில் செரிடோனின்
மற்றும் நியாசின் வேதிச் சேர்மமாகப் பிரிக்கப்படுகிறது. இவ்வேதிச்
சேர்மங்கள் மனஅழுத்தத்தைக் குறைத்து மனஅமைதியை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :
முந்திரி
பாலில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் உருவாக்கம்,
வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இதில்
உள்ள கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
ஆரோக்கியமான சருமத்திற்கு :
முந்திரி
பாலில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தில்
முக்கியப் பங்கு வகிக்கின்றன. இக்கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு
ஈரப்பதத்தை வழங்குவதோடு சரும அரிப்பு, எரிச்சல், முன்கூட்டிய முதிர்ச்சி
ஆகியவற்றை தடுக்கின்றன.
மேலும் இப்பாலில் உள்ள செம்புச்சத்து சருமம் மற்றும் கேச நிறத்திற்கு காரணமான மெலானின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும்
செம்புச்சத்து சரும நெகிழ்ச்சி மற்றும் சரும முதிர்ச்சியைத் தடுத்தல்
ஆகியவற்றிற்குக் காரணமான கொலாஜன் உற்பத்திக்கும் காரணமாகிறது. எனவே
முந்திரி பாலினை உண்டு ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
முந்திரி பாலானது சூப்புகள், சாலட்டுகள், ஐஸ்கிரீம்கள், குழம்பு வகைகள், காப்பி, டீ ஆகியவை தயாரிக்கும்போது சேர்க்கப்படுகிறது.
இளமை தரும் முந்திரி பாலினை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.