வழுக்கைத் தலையிலும் முடி முளைக்க வேண்டுமா?

வழுக்கைத் தலையிலும் முடி முளைக்க வேண்டுமா? 

முடி உதிர்தல் பிரச்சனைக்கு பல வகைகளில் நாம் தீர்வு தேடி அலைந்து பார்த்திருப்போம். எவ்வளவோ விஷயங்களை கையாண்டும் தலைமுடி உதிர்தல் பிரச்சினை மட்டும் தீரவில்லை என்பவர்கள், இந்த ஒரு பூவை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். அதுமட்டுமல்லாமல் வழுக்கை தலையில் கூட முடி முளைக்க செய்யக்கூடிய அற்புதமான சக்தி இந்த பூவிற்கு இருக்கிறது. 

அப்படியான பூ என்ன பூ?  

இதை வைத்து நாம் என்ன செய்ய இருக்கிறோம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலை வாரும் பொழுது கொத்து கொத்தாக முடி வேரிலிருந்து உதிர்ந்து வந்தால் நாளடைவில் உங்களுடைய தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். முன் தலையில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முடி இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் சுதாரித்து விழித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய முடி உதிர்தல் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகி உங்களுடைய தலை முடியை மொத்தமாக ரிப்பேர் செய்து விடும். இதனால் இயற்கையான அழகும் கெட்டுப் போய்விடும்.

முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஒரு கைப்பிடி அளவிற்கு ஆவாரம் பூவை எடுத்துக் கொள்ளுங்கள். ஆவாரம் பூ தலை முடிக்கு, உடல் உபாதைகளுக்கு மற்றும் சரும பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கக்கூடிய அற்புதமான மூலிகையாக இருக்கிறது. இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பால் சேர்த்து இந்த இரண்டு பூக்களையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் நன்கு ஊற விட்டு விடுங்கள். இதில் குளிர்ச்சி பொருட்கள் எதுவும் இல்லை எனவே தாராளமாக எல்லோருமே பயன்படுத்தலாம். அரை மணி நேரம் நன்கு ஊறிய பிறகு தலை முடியை ஷாம்பூ கொண்டு அலசாமல் சீயக்காய் போட்டு அலசுங்கள். இப்படி வாரம் ஒரு முறை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள், விரைவாகவே தலைமுடி உதிர்வது நின்று மீண்டும் அடர்த்தியாக கருகரு என்று நீளமாக வளரும்.

வழுக்கை தலையில் கூட முடி முளைக்க ஒரு கைப்பிடி அளவிற்கு ஆவாரம் பூவை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு ஆறவிட்டு குளிர்ந்த பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தடவி வந்தால் வழுக்கை தலையில் கூட மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

அந்த அளவிற்கு அற்புதமான மூலிகை சக்தி கொண்ட இந்த ஆவாரம் பூ நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது. ஆவாரம் பூ பொடியாக பயன்படுத்துவதை விட இப்படி பூவாக அரைத்து பயன்படுத்தினால் தான் விரைவான மற்றும் நிரந்தர தீர்வும் காண முடியும். ஆவாரம் பூவுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் தங்கம் போல தேகம் சரும பிரச்சனைகள் இன்றி மினுமினுப்பாக எப்பொழுதும் இளமையாக இருக்கும். இந்த அளவிற்கு மகத்துவங்கள் வாய்ந்த இந்த ஆவாரம் பூவை கண்டால் தவற விட்டு விடாதீர்கள், பறித்துக் கொண்டு வாருங்கள்.