கண் பார்வையை தெளிவாக்கும் ப்ரோக்கோலி.. இதன் நன்மைகள் தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

கண் பார்வையை தெளிவாக்கும் ப்ரோக்கோலி.. இதன் நன்மைகள் தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன வித்தியாசங்களை காணலாம் என்பது குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம்.

நமது ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய பேலன்ஸ்டு டயட்டை பின்பற்றுவது அவசியம். அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலி நமது உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த காய்கறியில் இருக்கக்கூடிய அதிக ஊட்டச்சத்து காரணமாக இதனை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்தை என்னென்ன வித்தியாசங்களை காணலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது: 

ப்ரோக்கோலியில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இது ஊட்டச்சத்து களஞ்சியமாக செயல்படுகிறது. ப்ரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வர நமது ஊட்டச்சத்து உட்கொள்ளல் மேம்படுத்தப்படுகிறது. வைட்டமின் C, வைட்டமின் K, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை ப்ரோக்கோலியில் அதிக அளவில் காணப்படுகிறது. கூடுதலாக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்தும் ப்ரோக்கோலியில் இருப்பதால் சமச்சீரான உணவுக்கு ஒரு கூடுதலாக இந்த காய்கறி அமைகிறது.

நாள்பட்ட நோய்ளை விரட்டுகிறது: 

சல்போராபேன் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் ப்ரோக்கோலியில் காணப்படுகிறது. இது நாள்பட்ட நோய்களை தடுக்கக்கூடிய அபார சக்தி கொண்ட ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகும். இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்கக்கூடிய ஆற்றல் சல்போராபேனுக்கு உண்டு.

செரிமானத்தை அதிகரிக்கிறது: 

நாம் ஏற்கனவே கூறியது போல ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்து காணப்படுவதால் இது செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு ப்ரோக்கோலி ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. மேற்படி ப்ரோக்கோலியில் காணப்படும் குளுக்கோசைனோலேட் என்ற ஒரு குறிப்பிட்ட நார்ச்சத்தானது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பதன் மூலமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது: 

ப்ரோக்கோலியில் வைட்டமின் K மற்றும் கால்சியம் சத்து இருப்பதன் காரணமாக எலும்பு பிரச்சினைகளில் இருந்து விடுபட இது ஒரு அற்புதமான காய்கறியாக அமைகிறது. தினமும் ப்ரோக்கோலி சாப்பிட்டு வந்தால் வலுவான எலும்புகளை பெறுவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்கிறது: 

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு ப்ரோக்கோலி ஒரு அற்புதமான உணவாகும். குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த இந்த காய்கறியை சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுப்பதன் மூலமாக இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதோடு இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு காய்கறியாகவும் இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த கவலை இல்லாமல் இருக்கலாம்.

கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது: 

லூட்டின், சியாக்ஸ்சாந்தின் மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலி நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. வயது தொடர்பான கண் பிரச்சினைகள், காட்டராக்ட் போன்றவற்றை தடுப்பதோடு, கண் பார்வையை மேம்படுத்தி நமது கண் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க ப்ரோக்கோலி உதவுகிறது.

நமது அன்றாட உணவில் ப்ரோக்கோலியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, கட்டாயமாக பாசிட்டிவான ஒரு சில விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கலாம். இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வெவ்வேறு விதமான பலன்களை நமக்கு தருகின்றன.