சருமம் கண்ணாடி போல ஜொலிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!
சருமம் கண்ணாடி போல ஜொலிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!!
முகத்தில்
அதிகமாக சுருக்கம் ஏற்படும் போதுதான் நமக்கு வயதான தோற்றம் தெரியும்.
முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி முகத்தை பொலிவாக கண்ணாடி போல
ஜொலிக்க வைக்க ஒரு சின்ன பொருளைத்தான் தான் இந்த பதிவின் மூலம் நாம்
தெரிந்து கொள்ள போகின்றோம்.
அப்படி
என்ன பொருளாக இருக்கும். ஆளி விதை தான் அந்த பொருள். ஆங்கிலத்தில் இதை
flax seeds என்று சொல்லுவார்கள். இது சரும அழகுக்கு, முடி வளர்ச்சிக்கு
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பலனை கொடுக்கும் பொருள். இது
பார்ப்பதற்கு விதை போல தான் இருக்கும். இந்த ஆளி விதைகளை வாங்கி அழகு
குறிப்புக்கு எப்படி பயன்படுத்துவது.
தேவையான
அளவு ஆளி விதைகளை வாங்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 3
டேபிள் ஸ்பூன் அளவு ஆளி விதைகளை போட்டு, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை
ஊற்ற வேண்டும். ஒரு சொம்பில் அளந்து கூட தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
இந்த தண்ணீர் மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க, தண்ணீர் கொழ கொழவென
நமக்கு கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு இது கை பொறுக்கும் சூடு
வந்தவுடன் உடனடியாக ஒரு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி உங்கள் கையை
கொண்டு கஷ்டப்பட்டு பிழிந்து எடுத்தால் கொஞ்சம் ஜெல் நமக்கு கிடைக்கும்.
அவ்வளவு
தான். இந்த ஜெல்லை எடுத்து ஒரு ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டுக்
கொள்ளுங்கள். இதோடு 1 டேபிள் ஸ்பூன், ஆலோவேரா ஜெல்லை ஊற்றி ஒரு ஸ்பூனை
வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். நமக்கு ஒரு கிரீம் கிடைத்து விடும்.
இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 10 நாட்களுக்குக் கூட கெட்டுப் போகாது.
தினமும்
இந்த பேக்கை முகத்தில் போட்டுக் கொள்ளலாம். முகம் முழுவதும் இந்த பேக்கை
அப்ளை செய்துவிட்டு ஜென்டில் ஆக ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, அப்படியே 20
நிமிடங்கள் விட்டு விட வேண்டும். ஜெல் நன்றாக காய்ந்து இருக்க பிடிக்கத்
தொடங்கும். அதன் பின்பு முகத்தை சாதாரணமாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு
கூட கழுவி கொள்ளுங்கள்.
தினமும் இந்த குறிப்பை
பின்பற்றி வந்தால் உங்கள் சரும அழகு பொலிவோடு பாதுகாக்கப்படும். அதேசமயம்
கண்ணாடி போல பள பளன்னு மின்னும். உங்கள் முகத்திலேயே மற்றவர்கள் கண்ணாடி
பார்த்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு
பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. எந்தவித பக்க விளைவுகளும்
ஏற்படாமல் இளமையை தக்க வைத்துக் கொள்ள இது சுலபமான வழி.