அழிஞ்சில் பழத்தின் மருத்துவ நன்மைகள்..!
அழிஞ்சில் பழத்தின் மருத்துவ நன்மைகள்..!
அழிஞ்சில் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாடு நீங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.
மற்ற எந்த வகையான உணவுகளை காட்டிலும் பழங்களில் அதிக அளவு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நமது நாட்டின் பாரம்பரிய வைத்தியக் குறிப்புகளிலும் உடலுக்கு நன்மைகள் ஏற்படும் பழங்களைப் பற்றி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் அழிஞ்சில் பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது அழிஞ்சில் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
அழிஞ்சில் பழத்தின் பயன்கள் :
ஆண்மை குறைபாடு :
இக்காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன. அழிஞ்சில் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.
உடல் சூடு :
நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங்களில் பலருக்கும் உடல் வெகு சீக்கிரத்தில் உடல் உஷ்ணமடைந்து தலைவலி, உடல் சோர்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமையான கோடை காலங்களில் அழிஞ்சில் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடற்சோர்வு நீங்கி உடலுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
குடற்புழுக்கள் :
சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் உற்பத்தியாகி, அவர்களின் உடல் நலத்தை பாதித்து, உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்தாக அழிஞ்சில் பழம் இருக்கிறது. இந்த பழங்களை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுத்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து, மலத்தின் வழியாக உடலை விட்டு அவை வெளியேறும்.
உடல் எடை கூடுவதற்கு :
நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி அழிஞ்சில் பழம் சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
வைட்டமின் சி :
அழிஞ்சில் பழம் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
மூலம் :
மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் அழிஞ்சி ல்பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.
இதய நோய்கள் :
நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.
கல்லீரல் :
மதுப் பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில அழிஞ்சில் பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.
சரும நலம் :
வயதாவதாலும், ஊட்டச் சத்தில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்கு தோல் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கங்களும், வயதான தோற்றமும் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் இருப்பவர்கள் அழிஞ்சில் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும்.
வயிறு நலம், செரிமான சக்தி :
எனவே இந்த அழிஞ்சில் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் இப்பழத்திற்கு உண்டு. குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் இந்த பழம் பேருதவி புரிகிறது.