கறுத்து கலை இழந்த முகத்திற்கு கடுக்காய் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க
கறுத்து கலை இழந்த முகத்திற்கு கடுக்காய் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க
இன்றைய காலகட்டத்தில் முகத்தை நல்ல நிறமாக மாற்றவும் முகத்தில் இருக்கும் கருத்திட்டுகள் மறையவும் முகம் எப்பொழுதும் பிரகாசமாக பளிச்சென்று மாற்றவும் அழகு நிலையங்களுக்கு பணத்தை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் அவசியமே இல்லை வீட்டில் கடுக்காய் பொடி மட்டும் இருந்தால் போதும் அதை வைத்து இத்தனை விஷயங்களையும் சுலபமாக நாமே சரி செய்து விடலாம்.
முகம் பளிச்சென சிகப்பாக கடுக்காய் ஃபேஸ் பேக்:
காலம் காலமாக பயன்படுத்தி வந்த அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காயை வைத்து தான் இந்த ஃபேஸ் பேக்கையும் நாம் தயார் செய்யப் போகிறோம்.
ஒரே ஒரு கடுக்காய் மட்டும் எடுத்து நன்றாக தூள் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அது இல்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் பொடி கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான பவுலில் இந்த கடுக்காய் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரே ஒரு விட்டமின் இ கேப்சூல் இவை எல்லாவற்றையும் கலக்க கொஞ்சம் ஒரிஜினல் பன்னீர்.
இவையெல்லாம் ஒன்றாக சேர்த்த பிறகு தண்ணீர் போல இல்லாமல் நல்ல திக்கான பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை போடுவதற்கு முன்பு உங்கள் முகத்தை ஒரு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு, இந்த கடுக்காய் பேக்கை முகம் முழுவதும் தேய்த்து விடுங்கள். கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையங்களை கூட இது நீக்கும். ஆகையால் கண்ணுக்கு கீழே கருவளையம் இருந்தால் அங்கு கொஞ்சம் அதிகமாக இந்த பேக்கை போட்டு விடுங்கள்.
முகத்தில் போட்ட பிறகு இதை ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டால் போதும் காய்ந்து முகம் முழுவதும் இழுக்க ஆரம்பித்து விடும். அதன் பிறகு லேசாக தண்ணீர் தொட்டு ஒரு மைல்டான மசாஜ் கொடுத்து முகத்தை அலம்பி விட்டால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்கு இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் நல்ல பளிச்சென்று நிறத்துடன் பளபளப்பாக தோன்றும்.
இந்த கடுக்காய் பொடி பேஸ்ட் செய்ய தேன், கேப்சூல் இதையெல்லாம் இல்லை என்றாலும் காய்ச்சாத பச்சை பால் ஊற்றி கலந்து கொள்ளலாம். அதுவும் இல்லை என்றால் வெறும் ரோஸ் வாட்டர் மட்டும் கூட சேர்த்து கலந்து கொள்ளலாம். ஒரு வேளை உங்களிடம் இது எதுவுமே இல்லை என்றாலும் கொஞ்சமாக தண்ணீர் மட்டும் ஊற்றிப் பேக் போட்டுக் கொள்ளலாம்.
இந்த கடுக்காய் பொடியை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினாலும் கூட போதும் அத்தனை பொலிவாக இருக்கும். கண்ணிற்கு கீழே கருவளையம் உள்ளவர்கள் கடுக்காய் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை கண்களுக்கு கீழே மட்டும் போட்டு வந்தால் போதும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். கடுக்காய் பொடியை வைத்து தயாரிக்கும் இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இந்த சுலபமான ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி சூப்பராக ஜொலிக்கலாம்.