தீராத உடம்பு வலிக்கு நிலவேம்பு கசாயம்...

தீராத உடம்பு வலிக்கு நிலவேம்பு  கசாயம்...

ஆயுர்வேதத்தில் பல வகையான நோய்களுக்கு பக்கவிளைவு இல்லாமல் மருந்துகள் உள்ளன. மூலிகைகள், தாவரங்கள் நம்முடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க உதவுகின்றன. நிலவேம்பும் அப்படியான மூலிகைத் தாவரம் தான். இது பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் மூலிகையாகும். எந்தெந்த நோய்களுக்கு நிலவேம்பு மூலிகை பயனளிக்கும் என்பதை இங்கு காணலாம். 

நிலவேம்பு மூலிகை கசப்பு சுவை கொண்டது. நீர்க்கோவை, மயக்கம் ஆகிய உடல்நல பிரச்சினைகள் சரியாகும். அஜீரண கோளாறு குணமாகும். இந்த இலைகள் மலமிளக்கும் என்பதால் மலச்சிக்கல் சரியாகும். நிலவேம்பு இலைகள் பசியை ஏற்படுத்தும்.

உடம்பு வலி: 

நமக்கு பல சமயங்களில் உடம்பில் வலி அதிகமாகிவிடும். அதை தாங்க முடியாமல், அவதிப்படுவோம். உடல் வலியை குறைக்க பலர் ஓய்வெடுத்துக் கொண்டாலும், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் நிலவேம்பு இலைகளை சாப்பிடலாம். ஏனெனில் இது வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. 

அஜீரணக் கோளாறுகள்:

இந்தியாவில் நொறுக்குத் தீனிகளை உண்ணும் போக்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடல் அமைப்பு மோசமடைகிறது. மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் வரலாம். அவற்றைப் போக்க தினமும் நிலவேம்பு உண்ணலாம். 

கல்லீரல் நோய்: 

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உள்ளூறுப்பு பகுதியாகும். அதே நேரம் உடலின் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதனால்தான் இந்த உறுப்பின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நீங்கள் தொடர்ந்து நிலவேம்பு மூலிகையை உட்கொண்டால், கல்லீரல் நோய் அபாயம் பெருமளவில் குறையும். 

தொற்றுநோய்கள்: 

பல வகையான நோய்த் தொற்றுகளிலிருந்து நிலவேம்பு நம்மைக் காக்கும் நிலவேம்பில் ஆன்டி-பயாடிக் பண்புகள் காணப்படுகின்றன, ஆகவே காய்ச்சல், காய்ச்சல் தொட்ர்பான பருவகால நோய்கள் தடுக்கப்படுகின்றன. தொண்டை நோய்த்தொற்றில் கூட நிலவேம்பு நன்கு செயல்படும். 

புற்றுநோய்: 

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், அதை கட்டுக்குள் வைக்க முடியும். நிலவேம்பு மூலிகையின் இலைகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோயின் ஆபத்து படிப்படியாக குறையத் தொடங்குகிறது. 

எப்படி உண்பது? 

நிலவேம்பு மூலிகை தாவரத்தின் வேரைக் கொண்டு கஷாயம் தயாரித்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் மேற்கண்ட நோய்களும் குணமாகும்,  நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.