வயிற்றுப் புழுக்களுக்கு என்ன சிகிச்சை?

வயிற்றுப் புழுக்களுக்கு என்ன சிகிச்சை?

 

1. பப்பாளி விதையை, மாதம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், வயிற்றில் வளரும் உருளைப்புழு, நாடாப்புழு ஆகியவை அழிந்து வெளியேறும்.

 

2. பப்பாளி விதை பொடி 2 தேக்கரண்டி அளவு ஒரு தம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

 

3. காலையில் எழுந்ததும், இரண்டு பற்கள் பூண்டு அரைத்து, பேஸ்ட் தயாரித்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க குடலில் புழுக்களின் வளர்ச்சியை தடுக்கலாம். உணவில், பூண்டு அதிகம் சேர்த்து வந்தாலும் புழுக்களை வெளியேற்றலாம்.

 

4. தினமும், காலையில், சிறிதளவு பாதாமை உட்கொண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.

 

5. தினமும், இரண்டு டீஸ்பூன், கற்றாழை சாறை, தொடர்ந்து, ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றில் வளரும் குடல் புழுக்களை தடுக்கலாம்.

 

6. உங்கள் வயிற்றில் புழுக்கள் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டால், ஒரு வாரத்துக்கு, தினமும் சிறிது அன்னாசியை உட்கொண்டு வர வேண்டும்

 

7. தேக்கரண்டி மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து பொடி செய்து, தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட குணம் தெரியும்.

 

8. வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, ஒரு நாளைக்கு, இரண்டு டீஸ்பூன் என, தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வர, வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள், வேறு சில குடல் ஒட்டுண்ணிகள் வெளியேற்றப்படும்.

 

9. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 துளி, சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4 தேகரண்டி சிறிது தேனில் கலந்து பெரியவர்களுக்கும் கொடுக்க குடற்புழுக்கள்  வெளியாகும்.

 

10. 1 பிடி குப்பைமேனி வேரை, இடித்து 1லி நீரிலிட்டு கால் லிட்டராக ஆகக் காய்ச்சிப்  பருக  நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும்.

 

11. குப்பைமேனி இலைச்சாறு 4 தேகரண்டி தொடர்ந்து 4 நாள் உட்கொள்ள வயிற்றுப்புழு நீங்கும்.

 

12. குப்பைமேனி இலை 5, பூண்டுப்பல் 1, சேர்த்தரைத்துக் கொடுக்க  மலப்புழுக்கள் வெளியாகும். சற்று அதிகம் கொள்ள கபம் மலத்துடன் வெளியாகும்.

 

13. வேப்பம்பட்டைக் கஷாயம் 6 தேகரண்டி, தினம் இருவேளை பருக குடற்புழு வெளியாகும்.

 

14. வேப்பிலைச் சூரணம் 1 தேகரண்டி, தினம் இருவேளை பால் அல்லது வெந்நீரில் கொள்ள குடல்புழுக்கள் வெளியாகும்.

 

15. வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம் காலை வெறும் வயிற்றில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும்.

 

16. ஒரு தேக்கரண்டி உலர்ந்த வேப்பம்பூவை ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்து மதியம் இரண்டு கவளம் சாதத்தில் பிசைந்து நான்கு நாட்கள் மதியம் சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

 

17. மலைவேம்பு இலைச்சாறு 4 தேகரண்டி சாப்பிட குடல்புழு வெளியாகும்.

 

18. மலைவேம்பு இலைகளை 2ல்1ன்றாய்க் காய்ச்சிப் பருக வயிற்றுப்புழு வெளியேறும்.

 

19. மலைவேம்பு வேர்பட்டை சூரணம் 1 தேகரண்டி தினம் இருவேளை வெந்நீருடன் கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

 

20. சுண்டைக்காயை வற்றல் செய்து  சூரணித்து அரை தேகரண்டி தினம் இருவேளை வெந்நீருடன் கொள்ள நாக்குப்பூச்சி, வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்.

 

21. பிரண்டைத் தண்டுகளை மேல் தோல் நீக்கி, உப்பு, புளி, காரம் சேர்த்து நெய்யில் வதக்கி  துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும். மூளை, நரம்புகளும் பலப்படும்.

 

22. பச்சைமஞ்சளைப் பிழிந்து சாறெடுத்து குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி கொடுக்க வயிற்றுப்பூச்சித் தொல்லை குணமாகும்.

 

23. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தம்ளர் மோரில் கலந்து, தினம் ஒரு முறை குடித்து வர, வயிற்றுப் புழுக்கள் அகலும்.

 

24. ஆடுதீண்டாப்பாளை இலை சூரணம்  கால் தேகரண்டி  இரவில் வெந்நீரில் கொள்ள வயிற்றுப்புழுக்கள் சாகும்.

 

25. ஒரு தம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி  விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர புழுக்கள் வெளியேறிவிடும் முடிந்தால் தினமும் செய்து வரலாம்.

 

26. ஒரு தம்ளர் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி  கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

 

27. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீர் 1 தம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

 

28. குழந்தைகளுக்கு இரவில் மாதுளம்பழத்தை சாப்பிட கொடுத்து காலையில் பேதி மருந்து கொடுக்கலாம்.

 

29. முருங்கை இல்லை சாறு காலை வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு குடிக்க கீரி பூச்சி நீங்கும்.

 

30. பன்னீர் பூவை குடி நீராக்கி கொடுக்க புழுக்கள் சாகும்.

 

31. முற்றின தேங்காயை நெல் வேக வைக்கும்போது அதனுடன் வேகவைத்து காலையில் தேங்காயை சாப்பிட தட்டை புழு நீங்கும்.

 

ஏதாவது ஒரு எளிய மருத்துவ முறையை பயன்படுத்தி பயனடையவும்.

 

 

மேலும் விபரங்களுக்கு,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.         

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147