கடலில் குளிப்பதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்

கடலில் குளிப்பதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்

கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே
கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது.

1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது.
2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது.
3. உடல் தசைகள் உரிய அளவில் சுருங்கி விரிகிறது.
4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத்தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும்.
5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும்.
6. மெக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது.
7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும்.
8  கால்சியம் உடலில் அனைத்து வீக்கத்தை சரி செய்கிறது.
9. கடல்நீர் அனைத்து வகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது.
10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவராக மாற்றுகிறது. 
11. நோய்க் கிருமிகளை கொல்கிறது. 
12. உடலையும் மனதையும் முழுவதுமாக சுத்தப்படுத்துகிறது.
எனவே அடிக்கடி கடல் நீரில் குளிப்பது மிக மிக சிறப்பு.

பல வருடமாக ஏதாவது நோய் குணமாகாமல் இருந்தால். கடலுக்கு அருகே தங்கி குறைந்தது ஐந்து நாள் தொடர்ந்து குளித்தால் கண்டிப்பாக பல வியாதிகள் குணமாகிறது.
எனவேதான் நமது முன்னோர்கள் இறப்பு வீட்டுக்கு, சுடுகாட்டுக்கு அல்லது கெட்ட காரியங்களுக்கு சென்று திரும்பி வரும் பொழுது, வீட்டின் முன்னே பக்கெட்டில் தண்ணீரும் அருகில் கல் உப்பும் வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வருவதற்கு முன்னால் உப்பை பக்கெட்டில் போட்டு கலக்கி, தலையோடு குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வரவேண்டும் என்று கூறுவார்கள்.

மேலும் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் கல் உப்பை ஒரு பாத்திரத்தில் வைத்தால் அறையில் உள்ள எதிர் மறை சக்திகளை நீக்கி அந்த அறையில் நேர் மறை சக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கும்.

கடலுக்கு சென்று குளிக்க முடியாதவர்கள், வாரம் ஒருமுறை வீட்டில் தண்ணீரில் உப்பைக் கலந்து தலையோடு குளித்தால் மிகவும் நல்லது.

கடலில் குளிக்கும் பொழுது நமது பிராண உடல் புதிதாக மாறுகிறது. இதுவே அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

கடலில் குளிப்பவர்கள் அதிகபட்சம் 45 நிமிடம் குளிக்கலாம். ஒரு நாளில் 45 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம்.