மஞ்சளும் வேப்பிலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடம்பில் நல்ல மாற்றங்கள் நடக்கும்!!

மஞ்சளும் வேப்பிலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடம்பில் நல்ல மாற்றங்கள் நடக்கும்!!


ஆயுர்வேதத்தில் உயிர் சக்தியை அதிகரிக்க, செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களை தடுக்க, அவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மிக நல்வாழ்வை மேம்படுத்த மூலிகைகளே போதுமானது. அப்படி வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்து எடுத்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

மஞ்சள் வேப்பிலை எப்படி சேர்ப்பது?

காலையில் வேப்பிலை மற்றும் மஞ்சளை எடுக்க வேண்டும். எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்.

தேவை :

வேப்பிலை பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் - 3 சிட்டிகை
தேன் - இனிப்பு தேவையெனில் அல்லது தண்ணீரில் எடுக்கவும்.

வெதுவெதுப்பான நீராக இருக்கட்டும்.
வேப்பிலை, மஞ்சள், தேன் அல்லது தண்ணீர் கலந்து எடுத்துகொள்ள வேண்டும். யோகா பயிற்சி, தியானம் செய்யும் போது எடுக்கலாம். தொடர்ந்து இதை கடைப்பிடிப்பதாக இருந்தால் உங்கள் ஆயுர்வேத மருத்துவ நிபுணரின் ஆலோசனையில் பேரில் எடுக்கலாம். தொடர்ந்து அல்லது வாரத்துக்கு சில முறை எடுக்கலாம்.

நீங்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக இதை எடுப்பதாக இருந்தால் பொறுமையாக இருக்க வேண்டும். சிலருக்கு உடனடியாக பலன் கிடைக்கும். சிலருக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். குறிப்பாக உடல்நல பிரச்சினைகளை அனுபவித்து வந்தால் நாட்கள் ஆகலாம்.

வே​ப்பிலையும் மஞ்சளும் எப்படி இணைந்து வேலை செய்கிறது:

வேப்பிலை மற்றும் மஞ்சள் பெரும்பாலும் அதன் தனிப்பட்ட மூலிகை பண்புகளுக்காக தனித்தனியாக எடுக்கப்படுகிறது.

செரிமான பாதை:

இவை இரண்டும் செரிமான பாதையை சுத்தம் செய்கிறது. ஊட்டச்சத்தை உறிஞ்ச உதவுகிறது. நச்சு நீக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கு இது இன்றியமையாதது.

ஆற்றலை அளிக்கிறது:

இது காஃபின் இல்லாமல் அதிகமாக தூண்டக்கூடியது. காலையில் முதலில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலவையானது உயிரணுக்களுக்கு உள்ள ஆற்றல் மையங்களை இயற்கையாக எழுப்ப செய்கிறது

இவை தூய்மையான இயற்கையான ஆற்றலை அளிக்கிறது.

கல்லீரலை சுத்தப்படுத்துதல்:

இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் போது நச்சு உடல் சுமையை குறைக்கிறது. இதன் மூலம் ஆற்றலும் அதிகரிக்கிறது.

பல்வேறு கடுமையான நாள்பட்ட நிலைகளை தடுப்பது

தேவையற்ற கிருமிகள், நோய்க்கிருமிகள் போன்றவற்றுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை அதிகரிக்க இவை தினசரி உதவுகிறது.சுத்தமான செரிமான மண்டலத்தை அளிக்கிறது.

நாள்பட்ட மர்மநோய்கள், அடிக்கடி சளி, இருமல், தோல் பிரச்சினைகள், இரத்தத்தை சுத்தப்படுத்துதல், செரிமான அமைப்பை சுத்தப்படுத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, மூட்டு இயக்கத்தை அதிகரிக்க உதவும்.

வேப்பிலையின் நன்மைகள்​:

ஆரோக்கியமான பாக்டீரியாக்களை சமநிலை செய்கிறது

குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு வேப்பிலை நன்மை செய்கிறது.

இது தோல் மற்றும் வாய்வழி நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்க செய்கிறது.

வேப்பிலை டிஸ்முடேஸ் மற்றும் குளுதாதயோன் போன்ற சக்தி வாய்ந்த ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அடங்கியுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து சீரான அழற்சி எதிர்வினைக்கு உதவுகிறது.

வேப்பிலைச்சாறு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் நன்மை பயக்கும்.

இதில் உள்ள லிமோனாய்டு என்ற தாவர கலவை வலி நிவாரண திறன்களை கொண்டுள்ளது.

மஞ்சளின் நன்மைகள்​:

​மஞ்சளில் உள்ள குர்குமின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை தடுக்கிறது.ஆரோக்கியமான அழற்சி பதிலை ஆதரிக்கிறது.

உடலின் இயற்கையான வலி நிவாரண பாதைகளுக்கு உதவுகிறது.

அறிவாற்றல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

இதயம் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

நஞ்சு நீக்குகிறது.

இவை பொதுவான ஆரோக்கிய குறிப்பு மட்டுமே. எக்காரணம் கொண்டும் சுயமாக இதை முயற்சிக்க கூடாது. இரண்டு கலவையை சேர்த்து எடுக்க விரும்பினால் மருத்துவரை அணுகி உங்கள் உடல் திறனுக்கேற்ப சரியான அளவில் எடுப்பதே நல்லது.