சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்களை இயற்கையான முறையில் வெளியேற்றும் முறை!

சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்களை இயற்கையான முறையில் வெளியேற்றும் முறை!  

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிப்படுகிறார்கள். பல்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதை யாரும் முறையாக பின்பற்றுவது இல்லை. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இனிப்பு வகை சாப்பிட்டு அப்படியே உறங்கி விடக்கூடாது. இதனால் நிச்சயம் பற்சொத்தை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாம் சாப்பிடும் இனிப்பு வகைகளில் கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் பற்களில் இருக்கும் கால்சியத்தின் அளவில் பாதிப்பை உண்டாக்கி பல்லில் சொத்தை உருவாக காரணமாக ஆகிவிடும். குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பல் விழுந்து விட்டாலும் மீண்டும் முளைத்து விடும். ஆனால் பெரியவர்களுக்கு அப்படி அல்ல. பல்லை எடுத்து விட்டால் மீண்டும் முளைப்பதில்லை. அது ஒரு குறையாகவே நம்முடன் இருந்து விடும். இதனால் பற்களை குறித்த போதிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நம்மில் பலரும் பற்களை பற்றிய போதிய அக்கறை கொள்வதில்லை. பற்களில் ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் தான் அதைக் குறித்த மருத்துவத்தை நாடி ஓடுகிறோம். பற்சொத்தை ஏற்படுவதால் அதை சுற்றியுள்ள கண், காது மற்றும் மூளை நரம்புகளும் பாதிக்கப்படுகிறது. தாங்க முடியாத வலியும் இதனால் உண்டாகிறது. இந்த சிகிச்சை மிக எளிய முறையில் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு ரகசிய குறிப்பாகும். அதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தமிழ் மூலிகை வகைகளில் மிக முக்கியமான மூலிகை ‘கண்டங்கத்திரி’ எனும் மூலிகை இருக்கின்றது. கண்டங்கத்திரி மூலிகை வகை செடியில் இருக்கும் அனைத்து பாகங்களும் சிறந்த மருத்துவப் பயனை நமக்கு அளிக்கிறது. கண்டங்கத்திரியில் இருக்கும் பழுத்த காய்கள் சிறிதளவு சேகரித்து எடுத்துக் கொள்ளுங்கள். கண்டங்கத்திரி விதைகளும் அல்லது பொடி வகைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. கண்டங்கத்திரி காய்களை நன்றாக காயவைத்து சருகாக்கி கொள்ளுங்கள். நன்கு காய்ந்து உலர்ந்ததும் விதைகள் தனியே வந்துவிடும். அந்த விதைகளை மட்டும் தனியே வையுங்கள்.

கண்டங்கத்திரி காய்ந்த காயில் ஒரு பெரிய ஊசியில் செருகி, ஒரு நல்லெண்ணெய் தீபத்தை விளக்கேற்றி, அந்த தீயில் இந்த காயை காண்பிக்க காய் தீயாக கனிந்து நன்றாக புகை வரும். அப்படி வரும் புகையை ஒரு புனலின் அகன்ற வாய் வழியே உள்ளேற்றி சிறிய பக்கத்தை நம் வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புகை வாய் முழுவதும் பரவி சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் புழுக்கள் இருந்தால் அனைத்தையும் உமிழ்நீர் வழியாக வெளியேற்றி விடும்.

இந்த முறை மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பலனைத் தருவதை நீங்கள் கண்கூடாக காணலாம். சொத்தைப் பல்லில் இருக்கும் வலியை உடனே நீக்கிவிடும். அதில் இருக்கும் கிருமிகளையும் உமிழ்நீர் வழியாக முற்றிலுமாக வெளியேற்றி சுத்தம் செய்துவிடும். உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத இயற்கையான பழங்கால வைத்திய முறை இது. இதுபோன்று இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்தாலே போதும்! சொத்தைப்பல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நாம் நிவாரணம் பெற முடியும்.