கொளுத்தும் வெயிலை சமாளிக்க வில்வபழ சர்பத்தை ஒரு டம்ளர் குடிங்க...
கொளுத்தும் வெயிலை சமாளிக்க வில்வபழ சர்பத்தை ஒரு டம்ளர் குடிங்க...
கோடைக்காலத்தில் கடைகளில் பலவிதமான ஜூஸ்கள் மற்றும் சர்பத்கள் விற்கப்படுவதுண்டு. மேலும் அதிக வெயிலின் தாக்கத்தைத் தணிக்க அனைவரும் அவற்றையே அடிக்கடி வாங்கி குடிப்போம். குறிப்பாக பெரும்பாலானோர் சர்பத்தை அதிகம் விரும்பி குடிப்பார்கள். சர்பத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் நிறைய பேருக்கு தெரியாத, ஆனால் கடைகளில் விற்கப்பட்டு வரும் ஒரு வகையான சர்பத் தான் வில்வப் பழ சர்பத்.
ஆம், வில்வப் பழத்தைக் கொண்டும் சர்பத் தயாரிக்கலாம். இந்த வில்வப் பழம் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டது. குறிப்பாக இது கோடைக்காலத்தில் சந்திக்கும் பல உடல்நல பிரச்சினைகளைப் போக்கக்கூடியது. வில்வப் பழத்தை நாம் பலவாறு சாப்பிடலாம். ஆனால் அதைக் கொண்டு சர்பத் தயாரித்தால், விரும்பி குடிக்கலாம்.
வில்வ பழம் ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட. இது நல்ல மணத்துடன், இனிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். வில்வ பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பல்வேறு கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் சுவாச பிரச்சினைகளை நீக்க உதவுகிறது. இப்போது கோடைக்காலத்தில் வில்வப்பழ சர்பத்தைக் குடிப்பதால் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
உடல் சூடு குறையும் :
உயிருக்கு ஆபத்தான இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் இந்த ஒரு பழம் போதுமாம்!
வெயில் காலத்தில் ஒரு டம்ளர் குளிர்ச்சியான வில்வப் பழ சர்பத்தைக் குடித்தால், அது உடல் சூட்டை உடனடியாக குறைக்க உதவும். முக்கியமாக இது ஐஸ்க்ரீம்மிற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த சர்பத் மிகவும் சுவையானதாக இருக்கும்.
சுவாச பிரச்சினைகளைத் தடுக்கும் :
வில்வ பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆயுர்வேதத்தில் சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வு ஒன்றிலும், வில்வ பழத்தில் உள்ள பண்புகள் நுரையீரலைத் தாக்கும் கொடிய வைரஸ் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாக தெரிவிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :
வில்வ பழ சர்பத் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. முக்கியமாக இந்த பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
வில்வ பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகின்றன.
எனவே, இந்த கோடையில் வில்வ பழ சர்பத்தைக் குடித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்