புது மாப்பிள்ளைகளுக்கு மசாலா பால்...

புது மாப்பிள்ளைகளுக்கு மசாலா பால்...

வாருங்கள்! உடலுக்கு சக்தியை அளிக்கும் மாப்பிளை மசாலா பாலை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்களின் உடல் வளர்ச்சிக்கும், ஆண்மை வளர்ச்சிக்கும் பார்த்தவுடன் வசீகரிக்கும் கட்டுக்கோப்பான உடம்பு பெறுவதற்கும் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. அதனுடன் பல்வேறு விதமான ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. அப்படி உடலையும், ஆண்மையையும் வளர்க்கும் விதத்தில் பல உணவுகள் உள்ளன.அப்படிப்பட்ட உணவு ரெசிபிகளில் ஒன்றான மாப்பிளை மசாலா பால் பானத்தை தான் இன்றைய பதிவில் காண உள்ளோம்.

இதனை தினமும் குடித்து வர,ஆண்கள் உடல் வலிமையுடன் காணப்படுவார்கள். குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆண்கள் இதனை தொடர்ந்து பருகி வந்தால் நல்லதொரு மாற்றத்தை நீங்கள் உணரலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் இதனை தினமும் எடுத்து வரலாம். தவிர ஊட்டச்சத்துக்கள் குறைந்து காணப்படும் கல்லூரி மாணவர்களும் இதனை வாரத்தில் ஒரு முறை செய்து பருகலாம். 

வாருங்கள்! உடலுக்கு சக்தியை அளிக்கும் மாப்பிளை மசாலா பாலை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பால்-1 க்ளாஸ்
பிஸ்தா-2
பாதாம்-3
பேரிச்சை -1
அத்திப்பழம்-1
பாதாம் பிசின்-1 ஸ்பூன்
ஏலக்காய்-1
ஜாதிக்காய் -1/4 ஸ்பூன்
தேன் -1 ஸ்பூன்
வெள்ளரி விதை-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாதாம் பிசினை அதனை ஒரு பௌலில் போட்டு தண்ணீர் ஊற்றி 10 சுமார் மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் பேரிச்சை ,கசகசா, பாதாம், பிஸ்தா, ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி இவைகளையும் தண்ணீர் ஊற்றி 10 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பிசினை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாலில் வடிகட்டி வைத்துள்ள பாதாம் பிசின் 1 ஸ்பூன்,1 ஸ்பூன் தேன்,1 ஸ்பூன் அரைத்த நட்ஸ் கலவை சேர்த்து நன்றாக கலந்து தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் இதனை குடிக்கலாம். கல்யாணத்திற்கு வரன் தேடுபவர்களும் , கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் இதனை உங்களது டெய்லி புட் சார்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தினமும் எடுத்துக் கொள்வதால் உங்களின் ஆண்மை சக்தி அபாரமாக உயரும்.