தினமும் வெந்தய டீ குடித்தால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்...

தினமும் வெந்தய டீ குடித்தால்  உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்...

பெரும்பாலும் டீ பிரியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். 

காலை எழுந்தவுடன் டீ குடித்தால் தான் அன்றைய நாள் நன்றதாக இருக்கும் என்று கூறுவார்கள்.

சர்க்கரை மற்றும் பால் கொண்டு செய்யப்படும் இந்த டீயில் நன்மைகள் கிடைக்காது.

அளவுக்கதிகமாக டீ குடித்தால் இரத்த சோகை மற்றும் இதய நோய் என்பவை ஏற்படும்.

அதற்கு பதிலாக வெந்தயத்தில் செய்யப்படும் டீ குடித்தால் உடம்பிற்கு நல்லது. 

வெந்தயம் :

வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்தாகும்.

இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யும்.

நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. 

வெந்தய டீ செய்யும் முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1கப் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின் கொதிக்கும் தண்ணீரில் வெந்தயம் சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியாக வடிகட்டி தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.  

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

• உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

• மாரடைப்பு வராமல் தடுக்கும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

• கொழுப்பை கரைக்கும்.

• சிறுநீரகம் சுத்தமாக இருக்கும்.

• உடல் எடையை குறைக்க உதவும்.

• கர்ப்பபை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவும்.

• மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி பிரச்சினையை தீர்க்கும்.

• தாய் பால் சுரப்பு அதிகரிக்கும்.

• மூட்டு வலி தீரும்.

குறிப்பு : காலையில் குடித்தால் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.