உடம்பில் வரும் மருக்கள் ஒரே நாளில் உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் போக ரொம்ப எளிதான வழிமுறை...

உடம்பில் வரும் மருக்கள் ஒரே நாளில் உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் போக ரொம்ப எளிதான வழிமுறை...
 

நம் சருமத்தில் பருக்களை கூட சுலபமாக விரட்டி அடித்து விடலாம், ஆனால் இந்த மருக்களை விரட்டி அடிப்பது என்பது தான் ரொம்பவே சிரமமான விஷயமாக இருக்கும். குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் இந்த மரு பிரச்சனை ஒரே நாளில் நீங்குவதற்கு நாம் ரொம்பவே ஈசியாக செய்ய வேண்டியது என்ன? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குட்டி குட்டி ஆக குருணை போல வரக்கூடிய இந்த மருக்கள் நாளடைவில் பெரிதாகவும் வாய்ப்புகள் உண்டு. அது மட்டும் அல்லாமல் ஒரு இடத்தில் மரு வந்தால் அதனுடைய பால் மற்ற இடங்களிலும் பரவ நேர்ந்தால் எல்லா இடங்களிலும் வர கூடும் அபாயமும் உண்டு. கண்கள், கழுத்து பகுதி போன்ற இடங்களை அதிகம் தாக்கக்கூடிய இந்த மருக்களை ஒரே நாளில் விரட்டி அடிப்பது எப்படி?

மருக்களை விரட்டியடிக்கும் சக்தி வெற்றிலை மற்றும் சுண்ணாம்பிற்கு உண்டு. இதை எப்படி பயன்படுத்துவது? என்பதில் தான் நிவாரணம் கிடைக்கிறது. முதலில் வெற்றிலையை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது பச்சையாக பிரஷ்ஷாக வாங்கிக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் வெற்றிலையின் காம்பு பகுதியானது உடைத்தால் அதிலிருந்து சாறு வர வேண்டும். அந்த சாறு தான் மருக்களை குணமாக்குகிறது.

பின்னர் உங்களிடம் சுண்ணாம்பு இருந்தால் அதை நீரில் அல்லது எலுமிச்சைப் பழ சாறில் கெட்டியாக குழைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சுண்ணாம்பு இல்லாதவர்கள் துணி துவைக்க பயன்படும் டிடர்ஜென்ட் பவுடரை கெட்டியாக நீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் சுண்ணாம்பு போலவே சூப்பராக வொர்க் அவுட் ஆகும்.

வெற்றிலையின் காம்பை லேசாக கிள்ளி விடுங்கள். அதிலிருந்து வரக்கூடிய சாற்றில் இந்த சுண்ணாம்பு கலவையை தொட்டு மருவின் மீது வைக்க வேண்டும். மருவின் மீது நேரடியாக வைக்கக் கூடாது. அதற்கு முன்னர் அந்த மருவை சுற்றிலும் தேங்காய் எண்ணெயை சிறிதளவு தடவிக் கொள்ளுங்கள். நேரடியாக தடவினால் கொப்பளிக்க வாய்ப்புகள் உண்டு. இது ஆபத்தானது! எனவே தேங்காய் எண்ணெய் தடவிய பிறகு சரியாக மருவின் மீது இதை வையுங்கள்.

எங்கெல்லாம் மருக்கள் இருக்கிறதோ, அங்கே எல்லாம் இதே போல தேங்காய் எண்ணெயை தடவி சரியாக மருவின் மீது வெற்றிலை சாற்றுடன், சுண்ணாம்பை கலந்து வைக்க வேண்டும். மற்ற இடங்களில் இதை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மருவை சுற்றியுள்ள இடங்களிலும் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள், பாதுகாப்பானது. பின்னர் அப்படியே நீங்கள் இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். நன்கு படுத்து உறங்கி விடுங்கள். காலையில் எழுந்து பார்த்தால் மருக்கள் கண்டிப்பாக உதிர்ந்து இருக்கும்.

நாள்பட்ட முதிர்ந்த மருக்களாக இருந்தால் உதிர்வதற்கு சற்று காலம் எடுக்கும் எனவே மூன்று நாட்கள் தொடர்ந்து இதே போல செய்யுங்கள். எப்பேர்பட்ட முதிர்ந்த மருக்களும் உதிர்ந்து விடும். கண் பகுதியில் மரு இருப்பவர்கள், சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒரு இடத்தில் செய்து பார்த்து விட்டு, உங்களுக்கு ஒத்துக் கொண்டால் மறு இடங்களில் நீங்கள் செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும். மருக்கள் உதிர இதை விட பெஸ்ட் ஐடியா இருக்க முடியாது, ட்ரை பண்ணி பாருங்க.