வாய்ப்புண்ணை வீட்டிலேயே குணப்படுத்தலாம்!!!
வாய்ப்புண்ணை வீட்டிலேயே குணப்படுத்தலாம்!!!
வாய்ப்புண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை உண்டாக்கக் கூடியது. வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பாதிப்பை எதிர்கொள்ளாதவர்கள் என்று யாரும் இல்லை. இதற்கு ஆயுர்வேத முறையில் சொல்லப்படும் தீர்வுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
வாய்ப்புண் என்பது வாய்வழி குழியின் உள்புறத்தில் ஏற்படும் வலிமிகுந்த புண்கள். இது கன்னம், மற்றும் உதடுகள், ஈறுகள் போன்ற இடங்களில் கொத்துகளாகவோ அல்லது தனியாகவோ வெளிப்படலாம். இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.
வாய்ப்புண் உண்டாக காரணங்கள் :
வாய்ப்புண்கள் உண்டாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உணவு முறையில் கறுப்பு மிளகு மிளகாய் போன்ற மசாலா பொருள்கள் காரணமாகிறது. இவை பித்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இது அமிலத்தன்மை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளால் உண்டாகும் நிலை. இந்த வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆயுர்வேத வீட்டு வைத்தியம் என்ன எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் தேன் :
தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புதிய திசுக்களின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது வாய்ப்புண் தீவிரமாகாமல் தடுக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
தேனை புண்ணின் மீது தடவிவிடலாம். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அதில் கலந்தும் புண்ணின் மீது பயன்படுத்தலாம். தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் புண் ஆறும்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயின் இயற்கையான அழற்சி பண்புகள் புண்களின் தாக்கத்தை குறைக்க செய்கிறது. புண் காரணமாக உண்டாகும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க செய்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
சிறிது தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு நன்றாக கொப்புளிக்கவும். நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் துளசி இலைகள் :
துளசி இலைகளை மென்று தண்ணீருடன் விழுங்குவது வாய் புண்களுக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும். இது நாள் ஒன்றுக்கு பல முறை செய்யலாம்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் உப்பு நீர் :
வாய்ப்புண்ணை ஆற்ற உப்பு நீர் உதவும். இது கிருமி நாசினியாக செயல்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
வெதுவெதுப்பான நீர் ஒரு டம்ளர் எடுத்து அதில் உப்பு சேர்த்து நன்றாக கொப்புளிக்கவும். புண்ணில் படும்படி இருக்கட்டும். பகல் நேரங்களில் இதை தொடர்ந்து செய்து வரலாம்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் கிராம்பு எண்ணெய் :
கிராம்பு எண்ணெயின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளன. இது வாய்வழி பிரச்சினைகளை குணப்படுத்த செய்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு பருத்தி துணியில் கிராம்பு எண்ணெயை நனைத்து அதை நேரடியாக புண் மீது தடவவும். உறிஞ்சுவதற்கு சில நிமிடம் அப்படியே விட்டு விடவும் பிறகு பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்ய வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
வாய்ப்புண்ணை குணப்படுத்தும் பூண்டு :
பூண்டு வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. இது வாய்ப்புண் சிகிச்சைக்கு உதவக்கூடியது. புண்ணில் இருக்கும் தொற்றுகளை வெளியேற்றச் செய்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
பூண்டு பற்களை இரண்டாக நறுக்கி, புண் உள்ள இடத்தில் மென்மையாக தேய்க்கவும். இலேசாக எரிச்சல் இருக்கும் எனினும் சிறிது நேரம் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.