கொலஸ்டிரால் முதல் ஆஸ்த்மா வரை... நோயற்ற வாழ்வை பெற மிளகு!

கொலஸ்டிரால் முதல் ஆஸ்த்மா வரை... நோயற்ற வாழ்வை பெற மிளகு! 

தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக  இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பைக் கட்டுப்படுத்த தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா ஒன்றை உணவில் சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கருப்பு மிளகு பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலா. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கருப்பு மிளகு ஆயுர்வேதத்தில் ஒரு மூலிகையாக பார்க்கப்படுகிறது. கருப்பு மிளகு பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கருப்பு மிளகு ஆயுர்வேதத்தில் சர்வ ரோக நிவாரணி என்று அழைக்கப்படுகிறது.

நார்ச்சத்தில்லாத உணவுகளையும், மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இவர்கள் உண்ணும் உணவில் மிளகு அவ்வப்போது சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும்.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.

மேலும் தினமும் மிளகு சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இதைத் தவிர அதன் மற்ற நன்மைகளையும்  அள்ளித்தரும் அந்த மசாலா நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருமிளகு தான். இதன் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்வோம்.

சிகரெட், பீடி, புகையிலை போன்ற போதை பொருட்கள் உடலுக்கு தீமை விளைவிப்பவையாகும். இப்பழக்கம் கொண்டவர்கள் இவற்றை பயன்படுத்தும் நேரத்தில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் அப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

கருப்பு மிளகு உங்கள் மூளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மிளகை சூடான பாலில் கலந்து குடிப்பதால் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டு வந்தால், அதிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க, தினமும் மிளகு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.  ஒரு மிளகு என்ற அளவில் தொடங்கி,  இரண்டு மூன்று என தினமும் ஒரு மிளகை அதிகரித்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். பின்னர், ஒரு மிளகு என்ற அளவில் படிப்படியாக, 14, 13 என குறைத்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு மிளகு என்ற அளவு வரும் வரை சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.

நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்துபற்றாக்குறை ஏற்படாது. சோர்வாகவும் இருக்காது. இதனுடன், சருமத்தில் வறட்சியும் இருக்காது.