இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்!!

இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு  மருந்தாக பயன்படும் தேங்காய் பால்!!

தேங்காய் பால் பல்வேறு அற்புத பலன்களை கொண்டது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 5 முக்கிய நோய்களுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தேங்காய் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும்.சட்னி அரைக்க, குழம்பு, பொரியல்,  என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மசாலா ஏதும் பயன்படுத்தாமல் தேங்காய் பாலை தனியாக எடுத்து பயன்படுத்தும் பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

* தேங்காய்ப்பால் அதிக கலோரிகளைக் கொண்டதால் உடனடியாக சத்துக்களை கொடுக்க கூடியது.

* தாது உப்புக்கள்,  பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க், வைட்டமின்கள், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.

ஐந்து முக்கிய வியாதிகளுக்கு தேங்காய் பால் மருந்தாக பயன்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

1. இருதய ஆரோக்கியத்திற்கு  தேங்காய் பால் மிகவும் உதவுகிறது என பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தேங்காய் பால் ட்ரைக்கிளிஸைரைடுகள் ரத்த நாளங்களில் படிவதை தடுத்து HDL எனப்படும் நல்ல கொழுப்புகள் உடலில் சேர்வதை ஊக்குவிக்கிறது. இதனால் இருதய நலனுக்கு தேங்காய் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே இதய சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் வாரத்தில் ஒரு முறை தேங்காய் பாலை எடுத்துக் கொள்வது நல்லது.

2. ஜீரண மண்டலத்தில் ஏற்படக்கூடிய புண், உள்ளவர்கள் சாதாரணமாக மாட்டு பாலை சேர்த்தால் அலர்ஜி ஏற்படக் கூடியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது தேங்காய் பால். அல்சர் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஏற்படக்கூடிய எரிச்சலை குணப்படுத்த தேங்காய் பாலை காலை வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் தரும்.

3. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சரும சுருக்கம், வறட்சி, பனி அல்லாத காலங்களிலும் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் தேங்காய் பால் சிறந்த ஒரு வரப்பிரசாதம். தேங்காய் பாலை பயன்படுத்தும் பொழுது தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வாக அமைகிறது.

4. உடல் எடையை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் 2 விதமான பலன்களை தேங்காய் பால் தருகிறது.

உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு விரதம் இருக்கும் பொழுது எதையும் சாப்பிடாத சமயங்களில் உடலுக்கு தேவையான கலோரியை கொடுக்கும் உன்னத பொருள் தேங்காய் பால்.

அதேபோல் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் உட்கொள்ளும் உணவுகளுடன் தேங்காய் பாலை சேர்த்து வரும் பொழுது உங்களது உடல் எடை கணிசமான அளவில் உயரும்.

5. நரம்பில் ஏற்படக்கூடிய சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு தேங்காய்ப்பால். பொதுவாக ஆண்களுக்கு உடலுறவின் பொழுது ஏற்படும் சோர்விற்கும், விரைப்பு தன்மை பிரச்சினைகளுக்கும், கடுமையான வேலை பார்ப்பவர்களாக இருந்தால் ஏற்படும் உடல் சோர்விற்கும் அடிக்கடி 100 மிலி தேங்காய் பாலை குடிக்கலாம்.

இதன் மூலம் நரம்பு சோர்வு நீங்கி உடலுறவு திறன் மற்றும் நரம்புக்கு தேவையான ஊக்கம் ஆகியன மேம்படும் வித்தியாசம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவை மட்டும் அல்லாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.