கிரீன் டீ உடலில் செய்யும் மேஜிக்

கிரீன் டீ உடலில் செய்யும் மேஜிக்
 

இப்பொழுதெல்லாம் மக்கள் பெரும்பாலும் டீ காபி போன்றவற்றை தவிர்த்து விட்டு கிரீன் டீ-க்கு மாறி வருகிறார்கள். இது உண்மையில் நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். கிரீன் டீ-யில் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதையும் யாரெல்லாம் எடுக்கக் கூடாது என்பதையெல்லாம் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சீனாவின் தேசிய பானமான இந்த கிரீன் டீ சீனர்கள் அதிக நாட்கள் இளமையுடன், ஆரோக்கியமுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இப்போது நாடு முழுவதும் இந்த கிரீன் டீயின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பரவத் தொடங்கி விட்டது. எந்த ஒரு பொருளிலும் நன்மை என்று பல இருந்தால் நிச்சயம் அதில் தீமை என்றும் ஒன்று இருக்கத் தான் செய்யும் இந்த பதிவில் அது இரண்டையும் தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ தயாரிப்பு முறை:

கிரீன் டீ தயாரிக்க டீ தூளாக இருப்பதை பயன்படுத்தக் கூடாது இலைகளாக இருப்பதை தான் பயன்படுத்த வேண்டும். அதே போல் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிய பிறகு கிரீன் டீ இலைகளை போட்டு ஒரு தட்டு வைத்து மூடி விட வேண்டும். இரண்டு நிமிடம் வரை அதிலிருந்தால் போதும் அதற்கு மேல் கிரீன் டீ சாறு இறங்கக் கூடாது அது கசப்பாக மாறி விடுவதோடு, வேறு உபாதைகளையும் நமக்கு ஏற்படுத்தி விடும். அதே போல் கிரீன் டீயில் சர்க்கரை கலந்தும் குடிக்கக் கூடாது. எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் அல்லது சிறிது இஞ்சியும் கலந்து கொள்ளலாம். அதை அப்படியே குடிக்க சிரமமாக இருக்கிறது என்றால் சிறிது தேன் கலந்து குடிக்க பழகிக் கொள்ளலாம். இந்த கிரீன் டீ ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் அளவு குடித்தால் போதும் அதற்கு மேல் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

கிரீன் டீயின் நன்மைகள்:

உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ முக்கிய பங்காற்றுகிறது. கிரீன் டீ குடிப்பதால் நம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் குறையும். டயட் உணவு மேற்கொள்பவர்களுக்கு கிரீன் டீ நல்ல ஒரு பலனைத் தரும்.

இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது இதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது . அது மட்டும் இன்றி இது குடல் சம்பந்தமான புற்று நோயை தடுக்கவும் உதவி செய்யும். கிரீன் டீ பருக்கள் வராமல் சருமத்தை பராமரிக்கிறது , வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது, கிரீன் டீ அருந்தும் போது அதிக ஆரோக்கியத்துடன் இருப்பதோடு அதிக நாட்கள் இளமையுடனும் இருக்க முடிகிறது.

கிரீன் டீ தொடர்ந்து அருந்தும் போது ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை இது கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளதால் ரத்த குழாயில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை இது பெரும் அளவு குறைகிறது. நரம்பு சம்பத்தமான பிரச்சினையை சரி செய்கிறது.

கிரீன் டீ தினமும் பருகி வருவதால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும் அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு உடம்பில் எப்போதும் ஒரு வித நடுக்கம், சோர்வு, பயம் போன்ற உணர்வுகள் இருக்கும். அது போன்றவற்றை எல்லாம் கூட இந்த கிரீன் டீ அருந்தும் பொழுது சரி செய்யப்படுகிறது. இந்த கிரீன் டீ செரிமானத் தன்மைக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. எனவே உணவு அருந்தி 20 நிமிடம் கழித்து இந்த கிரீன் டீ பருகி வந்தால் செரிமான தன்மை விரைவில் நடக்கும்.

கிரீன் டீ அருந்தும் போது கவனிக்க வேண்டியவை:

கிரீன் டீ அதிக சூட்டிலோ அல்லது ஆறிய பிறகு குடிப்பதோ கூடாது. அது மட்டும் இன்றி கிரீன் டீ ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதிகபட்ச நான்கு கப் வரை குடிக்கலாம். அதற்கு மேல் கொடுக்கும் போது இது ரத்தத்தை உறையாத தன்மைக்கு கொண்டு செல்லும் அபாயம் உண்டு.

கிரீன் டீயை அதிகம் கொதிக்க வைத்தும் பயன்படுத்தக் கூடாது. இது இளம் பச்சை நிறத்தில் இருக்கும் பொழுதே பருக வேண்டும். அதிகம் நிறம் மாறிய பின் குடிப்பதால் உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை ஆல்கஹாலுடன் சேர்த்து அல்லது உணவு இடைவெளியில் சாப்பிடுவதோ மிகவும் தவறு அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது தவிர்க்க வேண்டும். உடம்பில் வேறு ஏதும் பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீயை தொடர்ந்து எடுக்கும் பொழுது மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது மிகவும் நல்லது.