Uric Acid, மூட்டு விறைப்பு தன்மையைக் குறைக்க எளிய மூலிகை மருத்துவம்...

Uric Acid, மூட்டு விறைப்பு தன்மையைக் குறைக்க எளிய மூலிகை மருத்துவம்...

யூரிக் அமிலம் மற்றும் கீல்வாதத்திலிருந்து விடுபட, மூன்று பச்சை இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.

யூரிக் அமில அளவு உடலில் அதிகரிப்பதன் காரணமாக, வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் விறைப்பு ஆகியவற்றுடன், உடலில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரகத்திலும் அழுத்தம்  ஏற்படுகிறது. யூரிக் அமிலத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படும்  மூன்று இலைகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த இலைகளை தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. இவை நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் இலைகள் தான்.

மூட்டுவலி போன்ற நோய்கள் இப்போது  வயது முதிர்ந்தவர்களை மட்டுமல்லாது, இளைஞர்களையும் தாக்குகின்றன. அதிக யூரிக் அமில பிரச்சினை உடலில் நீண்ட நாட்களாக நீடித்தால், எலும்புகள் மட்டுமின்றி, சிறுநீரகம் முதல் கல்லீரல் வரையிலும் பாதிப்பு ஏற்படும்.

உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் சரியாக வடிகட்ட முடியாமல் போனால், அது இரத்தத்தில் கலந்து மூட்டுகளுக்கு இடையில் படிந்து விடும். எனவே  யூரிக் அமைலம் அதிகரிப்பதன் காரணமாக, எலும்பு, மூட்டு மற்றும் திசுக்களின் சேதம் அதிகரிக்கிறது. எனவே யூரிக் அமிலத்தை குறைக்கும் குணம் எந்த மூன்று பச்சை இலைகளுக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

யூரிக் அமில அளவைக் குறைக்கும் வெற்றிலை :

வெற்றிலைகள் யூரிக் அமில அளவைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். வெற்றிலைச் சாறு கொடுக்கப்பட்ட எலிகளின் யூரிக் அமிலத்தின் அளவு 8.09mg/dl இலிருந்து 2.02mg/dl ஆகக் குறைந்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு வெற்றிலையை வாயில் போட்டு மெல்லலாம். ஆனால் அதனுடன்  புகையிலை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொத்தமல்லி இலைகள் :

கொத்தமல்லி இலைகள் இரத்தத்தில் உள்ள கிரியாட்டினின் மற்றும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ள கொத்தமல்லி இலைகளில், வைட்டமின் சி மற்றும் கே போன்றவையும் நிறைந்துள்ளன. இந்த இரண்டு வைட்டமின்களும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர கால்சியம், பொட்டாசியம், தயாமின், பாஸ்பரஸ் மற்றும் நியாசின் போன்ற தாதுக்களும் இதில் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் குறைய, கொத்தமல்லியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். ஒரு பிடி கொத்தமல்லியை இரண்டு கிளாஸ் தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க ஆரம்பித்தால், சில நாட்களிலேயே பலன் தெரியும்.

யூரிக் அமிலத்தைக் குறைக்கும்  பிரியாணி இலைகள் :

பிரியாணி இலை சமையலறையில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பச்சை இலைகள் யூரிக் அமிலத்தை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். எனினும் பச்சை பிரியாணி இலை கிடைக்கவில்லை என்றால் உலர்ந்த இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலிக் அமிலம் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பிரியாணி இலைகள் அதிக யூரிக் அமிலத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறைந்தது 15 பிரியாணி இலைகளை எடுத்து மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு குடிக்கவும்.

மேலே கூறப்பட்டுள்ள  மூலிகைகள் இரத்தத்தில் கரைந்துள்ள யூரிக் அமிலத்தை வடிகட்டி, முழங்கால் வலி மற்றும் விறைப்புத் தன்மையை போக்கும்.