நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் துளசியை எவ்விதம் சாப்பிடலாம்?
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் துளசியை எவ்விதம் சாப்பிடலாம்?
பொதுவாக மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம்.
ஆதிகாலம் தொட்டே பயன்படுத்தி வரும் துளசி இலை பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளை தடுக்க துளசி உதவுகிறது.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துளசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறது ஆய்வுகள்.
அந்தவகையில் துளசியை நீரிழிவு நோயாளிகள் எப்படி எடுத்துக் கொள்வது என்பதை பார்க்கலாம்.
எப்படி சரி செய்கின்றது?
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் துளசி முக்கிய இடம்பெறுகின்றது.
இதனை சிகிச்சைக்காக பயன்படுத்தும் போது உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவை நன்றாக மேம்படுத்துகிறது.
துளசியின் இலைகள் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை கொண்டுள்ளன. இது யூஜெனால், மெத்தனால் மற்றும் கேரியோஃபிலீன் போன்ற கூறுகளை உருவாக்குகின்றான். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்து சர்க்கரை நோயை குறைக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் துளசியை எப்படி எடுப்பது?
• துளசி சாற்றை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்தும் வரலாம். அல்லது துளசி பொடியை வாங்கியும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
• வீட்டில் துளசி இருந்தால் துளசி இலையை அப்படியே மென்று சாப்பிடலாம்.
• துளசி இலையை செடியில் இருந்து பறித்து அப்படியே தேநீராக்கி குடிக்கலாம். ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து புதிய அல்லது உலர்ந்த துளசி இலைகள் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து அடுப்பை அணைத்து மூடிவிடவும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து இலைகளை வடிகட்டி குடிக்கவும்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அடிக்கடி துளசி எடுக்க கூடாது.
ஃப்ரீ டயபாட்டீஸ் இருப்பவர்கள் தினமும் துளசி எடுக்க கூடது.
கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் துளசியை தவிர்க்க வேண்டும்.
குறிப்பு :
சர்க்கரை நோயாளிகள் துளசியை தினமும் எடுத்து வரும் போது இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது நல்லது.
ஆரம்பத்தில் இவை குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு உண்டு செய்யலாம். வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாள் என்று எடுத்து கொள்ளலாம்.